சேரர் காலச் செப்பேடுகள்
ஆசிரியர்:
டாக்டர் மு.ராஜேந்திரன் இ ஆ ப
விலை ரூ.250
https://marinabooks.com/detailed/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=1145-8182-3075-3702
{1145-8182-3075-3702 [{புத்தகம்பற்றி சேர மன்னர் வரலாறு முழுமையாகவும், தொடர்ச்சியாகவும் தொகுத்து எழுதப்பெறாதது போலவே சேரர் செப்பேடுகளும், மிகச் சிலவற்றைத் தவிர, பெரும்பாலும் வரலாற்று நூல்களில் இடம் பெறாதது மட்டுமல்ல, அவை அறிமுகப்படுத்தப்படவுமில்லை . இது பெரும் குறையே. அக்குறையை நீக்கும் பொருட்டு மிக அரிதின் முயன்று இச்சேரர் காலச் செப்பேடுகள் பற்றிய தம் அறிமுக ஆய்வு நூலை முனைவர் மு.ராஜேந்திரன் அவர்கள் படைத்துள்ளார்கள். விரிந்த தன் நூல் பயிற்சிப் பரப்பின் மூலமும், மிகத் தீவிர விசாரிப்புகள், ஆய்வின் மூலமும் பல புதிய செப்பேடுகளைக் கண்டறிந்து, இந்நூலை முழுமையாக மிகவும் சிறந்த முறையில் உருவாக்கியளித்துள்ளார்கள், தமிழக வரலாற்றில் சேர நாடு பற்றி வெளிப்படாத பல புதிய அத்தியாயங்களை உருவாக்கும் இந்நூல் தொகுப்பு ஒரு மகத்தான முயற்சியாகும். செப்பேட்டின் தொடக்கத்தில் கட்டமிட்டுச் செப்பேடு தரும் முக்கிய செய்தியைக் கூறியிருப்பது சிறப்புக்குரியது.}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866