சேரன் செங்குட்டுவன்
₹140.00 ₹133.00 (5% OFF)

சேரன் செங்குட்டுவன்

ஆசிரியர்: மயிலை சீனி. வேங்கடசாமி

Category வரலாறு
FormatPaper Back
Pages 136
Weight150 grams
₹50.00 ₹47.50    You Save ₹2
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereசேரன் செங்குட்டுவனுடைய வரலாற்றை ஆராய்கிறபோது அவ்வரசன் வாழ்ந்திருந்த காலநிலை, சூழ்நிலை முதலியவைகளை அறிய வேண்டியது அவசியமாகும். செங்குட்டுவனுடைய வரலாற்றுக் குறிப்புகள் சங்க நூல்களிலேதான் காணப்படுகின்றன. ஆகவே, அவன் சங்க காலத்தில் - கடைச் சங்க காலத்தில் - வாழ்ந்திருந்தான் என்பது தெரிகின்றது. அவன் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்திருந்தான். அக்காலத்து அரசியல் சூழ்நிலை சங்க நூல்களிலிருந்து தெரிகின்றது.
அக்காலத்து தமிழகத்தைச் சேர, சோழ, பாண்டியர் ஆகிய மூவேந்தர் ஆட்சி செய்திருந்தார்கள். அக்காலத்தில் சேரநாடு தமிழ்நாடாக இருந்தது. மூவேந்தருக்குக் கீழடங்கி, குறுநில மன்னர்களாகிய சிற்றரசர்கள் பலர் இருந்தனர். அவர்களுக்கு அக்காலத்தில் வேளிர் அல்லது வேளரசர் என்பது பெயர். அக்காலத்தில் தமிழகம் சோழ நாடு, பாண்டிய நாடு, சேர நாடு, துளு நாடு , தொண்டை நாடு கொங்கு நாடு என்று ஆறு பிரிவுகளாகப் பிரிந்திருந்தது. சேர, சோழ, பாண்டி நாடுகளை முடியுடைய பேரரசர் மூவர் அரசாண்டனர். கொங்காண நாடாகிய துளு நாட்டை நன்னர் என்னும் பெயருடைய வேளிர் அரசாண்டனர். கொங்கு நாட்டுக்கும் தொண்டை நாட்டுக்கும் பேரரசர் (முடிமன்னர்) அக்காலத்தில் இல்லை. கொங்கு நாட்டையும் தொண்டை நாட்டையும் குறுநில மன்னர்கள் ஆட்சி செய்து கொண்டிருந் தார்கள். கடைச் சங்க காலத்தின் இறுதியில் கி.பி. 2ஆம் நூற்றாண்டின் மத்தியில் மாறுதல் ஏற்பட்டது.


உங்கள் கருத்துக்களை பகிர :
மயிலை சீனி. வேங்கடசாமி :

வரலாறு :

கௌரா பதிப்பக குழுமம் :