செஞ்சொல் உரைக்கோவை

ஆசிரியர்: திருமுருக கிருபானந்த வாரியார்

Category கட்டுரைகள்
Publication குகஸ்ரீ வாரியார் பதிப்பகம்
FormatPaperback
Pages 292
4th EditionJan 2017
Weight200 grams
Dimensions (H) 19 x (W) 2 x (D) 13 cms
₹86.00 $3.75    You Save ₹4
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866உடம்பை வளர்ப்பதுபோல் உயிரையும் வளர்க்க வேண்டும். உடம்பு இரை தேடுவதுபோல் உயிர் இறையைத் தேடவேண்டும். உடம்பை உணவு வளர்க்கும். உயிரை உணர்வு வளர்க்கும். அதனால்தான் திருவள்ளுவர் மெய்யுணர்வு என்று ஓர் அதிகாரமே வகுத்திருக்கின்றார்.
ஆதலினால், தன்னையும், தன் தலைவனையும், தலைவனுடைய திருவருட் செயலையும் சிந்திக்கின்றவன் உயர்வு பெறுவான்.அருணகிரிநாதர் 'சிந்திக்கிலேன்' என்று கந்தரலங்காரத் தில் உபதேசிக்கின்றார். ஒவ்வொரு மனிதனும் சிவநெறியை ஆராய்தல் வேண்டும். இவ்வாறு ஆராயும் தன்மையில்லாதவர் கள் உள்ளத்துள் இறைவன் ஒளிந்திருப்பானாம்.
"ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே” என்கின்றார் மணிவாசகர்.“ஓரவொட்டார் ஒன்றை உன்னவொட்டார்" என்னும் அருள்வாக்கும் இங்குச் சிந்தித்தற்குரியது. ஆதலால், நாம் உய்வதற்குரிய உயர்ந்த ஞான நூல்களை ஓதி உணர்ந்து, சிந்தித்துத், தெளிவு பெறுதல் வேண்டும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
திருமுருக கிருபானந்த வாரியார் :

கட்டுரைகள் :

குகஸ்ரீ வாரியார் பதிப்பகம் :