சுந்தர ராமசாமி சிறுகதைகள்

ஆசிரியர்: சுந்தர ராமசாமி

Category மொழிபெயர்ப்பு
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatHard Bound
Pages 888
First EditionNov 2006
4th EditionAug 2014
ISBN978-81-904647-4-1
Weight1.07 kgs
Dimensions (H) 23 x (W) 15 x (D) 4 cms
₹750.00 ₹675.00    You Save ₹75
(10% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866சுந்தர ராமசாமியின் படைப்பு ஆளுமையின் முக்கியமான பல கூறுகளை அவரது சிறுகதைகளிலேயே தெளிவாக அடையாளம் காணமுடிகிறது. பல வழிகளில் பயணம் செய்துவந்த சுந்தர ராமசாமியின் இலக்கிய வெளிப்பாடுகள் சிறுகதைகளின் வாயிலாகவே தொடங்கியது மட்டுமல்ல; சிறுகதைகளின் வழியாகவே கூர்மையாகத் தம்மை நிலை நிறுத்திக் கொண்டன. தமிழ் நாவல் வரலாற்றிலேயே அதிக விவாதங்களை உருவாக்கியுள்ள 'ஜே.ஜே: சில குறிப்புகள்' நாவலை எழுதியிருந்தாலும் சிறுகதைகளை மட்டுமே வைத்து அவரைத் தமிழின் முக்கியப் படைப்பாளிகளில் ஒருவராகக் கூறிவிட முடியும். சு.ரா.வின் சிறுகதைகள் வாசிப்பை ஓர் இனிய அனுபவமாக்கும் அதேநேரத்தில் தீவிரமான அனுபவத் தின் தொந்தரவுக்கும் நம்மை உள்ளாக்குகின்றன. செறிவும் நேர்த்தியும் கொண்ட மொழியோடு உறவுகொள்ளும் சுகத்தை அளிக்கும்போதே உக்கிரமான தேடலின் கனத்தையும் நம் மீது சரியச் செய்துவிடுகின்றன. மனித துக்கத்தையும் அவலங்களையும் மட்டுமன்றி நெகிழ்வையும் விகாசத்தையும் பதிவு செய்கின்றன.)வாழ்வுக்கும் நமக்கும், காலத்திற்கும் நமக்கும், மொழிக்கும் நமக்கும் இடையேயான உறவுகளைச் செழுமைப் படுத்துவது ஒரு கலைஞனின் முக்கியமான பங்களிப்பாக இருக்க முடியும். சுந்தர ராமசாமியின் சிறுகதைகள் இதைப் பெருமளவில் நிறைவாகச் செய்திருக்கின்றன

உங்கள் கருத்துக்களை பகிர :
சுந்தர ராமசாமி :

மொழிபெயர்ப்பு :

காலச்சுவடு பதிப்பகம் :