சுந்தரி கண்ணால் ஒரு சேதி (பணம் காய்ச்சி மரம்)

ஆசிரியர்: பாலகுமாரன்

Category கதைகள்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
FormatPaper back
Pages 280
Weight350 grams
₹185.00 ₹166.50    You Save ₹18
(10% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஇருதயத்தை யாரோ நோண்டி எடுத்து, ஒரு எவர்சில்வர் தட்டில் வைத்து அவனிடம் நீட்டினார்கள்.
"என்னங்க அது?” ஆவலாக இருதயத்தைப் பார்த்தபடியே கேட்டான்.
“உன்னோட ஹார்ட்டுப்பா. பார்க்கணும்னு சொன்னல்ல, பாரு!" வெள்ளை கோட் அணிந்தவர் பதில் சொன்னார். அவரிடம் எப்போதே சொல்லியிருந்தது ஒரு கனவு போல ஞாபகம் வந்தது. எப்போது சொன்னோம் என்று முகம் சுருக்கி யோசிக்க, போன வருடம் ஒரு கனவில் அவரிடம் சொல்லியிருப்பதாகத் தோன் றியது.
'அந்த கனவிலே சொன்னேன். இந்தக் கனவில வந்து அறுத்துத் தரீங்களே. அறுக்கறதுக்கு முன்னாடி வந்து கேட்க மாட்டீங்களா?' இருதயமில்லாமல் என்ன செய்வது என்று கவலை வந்தது.
"கூப்பிட்டா உடனே வந்துட முடியுமா? ஆயிரம் வேலை யிருக்கில்ல. இது உன் இருதயம்தானே? நல்லா பார்த்துக்க.'' அந்த வெள்ளை உடையணிந்த ஆள் கட்டளையிட்டார். ஒரு கைப்பிடியளவு மாமிசப் பிண்டம் ஆரஞ்சாய், சிகப்பாய், சில இடங்களில் கருநீலமாய், கொஞ்சம் ஈரப்பசை மினுமினுப்போடு அந்த எவர்சில்வர் தட்டிலிருந்தது. எவர்சில்வர் தட்டின் விளிம்பில் கொஞ்சம் சாம்பார் கறையிருந்தது

உங்கள் கருத்துக்களை பகிர :
பாலகுமாரன் :

கதைகள் :

விசா பப்ளிகேசன்ஸ் :