சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து

ஆசிரியர்: திரு.வி.கல்யாணசுந்தரனார்

Category கட்டுரைகள்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 88
First EditionDec 2017
ISBN978-93-87573-18-5
Weight150 grams
Dimensions (H) 23 x (W) 1 x (D) 15 cms
₹70.00 $3    You Save ₹3
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இரண்டாம் பதிப்பில் (1937) திருச்சி - தஞ்சைஜில்லாத் தமிழர் மாணாக்கர் மகாநாட்டின் தலைமையுரை சேர்க்கப்பட்டது. நூலின் உள்ளுறைக்கேற்ப நூலுக்குச் சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து என்னுந் தலைப்பு அணியப்பட்டது.
நூன்முறை பற்றி இந்நூல் எழுதப்பட்டதன்று. மூன்று மகா நாடுகளின் தலைமையுரைகளைக் கொண்டதே இந்நூல். அம்மூன்றும் வெவ்வேறிடங்களில் வெவ்வேறு பொழுதில் கூறப்பெற்றன. இளமையுலகம் மூன்றிற்கும் பொதுப்பட நிற்கிறது. ஆகவே, ஒரு மகாநாட்டுத் தலைமையுரையில் போந்துள்ள பொருள் சில, மற்றொரு மகாநாட்டுத் தலைமையுரையிலும் வேற்றுருவில் திகழா நிற்கும்.
இந்நூற்கண் இளமை, மாண்பு, அழகின் பெற்றி, இளமை யழகோம்பு முறைகள், காவியச் சிறப்பு, ஓவியத்திறன், இசை நுட்பம், நாடக நலன், சமரச சன்மார்க்க மென்னும் அன்பு நெறியே சமயமென்பது. கோயில் சீர்திருத்தம், தமிழ் மாண்பு, தமிழர் யார் என்பது முதலியன ஓதப்பட்டிருக்கின்றன; நாடு, மொழி, பிறப்பு முதலியவாற்றான் வேற்றுமை பாராட்டுவதால், சகோதர நேயத்துக்கு ஊறு நிகழ்தல் தெள்ளத் தெளிய விளக்கப்பட்டிருக்கிறது; சாதி வேற்றுமை; தீண்டாமை, பெண்ணடிமை முதலிய சிறுமைகளின் நீக்கம் நாட்டுக்கு விடுதலை நல்குவது என்பது வலியுறத்தப் பட்டிருக்கிறது; கண்மூடி வழக்கவொழுக்கங்கள் மிக உரமாக மறுக்கப்பட்டிருக்கின்றன; வாழ்விற்குரிய வேறுபல சீர்திருத்தங்களும் குறிக்கப்பட்டிருக்கின்றன. இந்நூலின் உள்ளுரை இளைஞருலகிற்கு நல்விருந்தளிக்குமென்று கருதுகிறேன்.

திருவாரூர் வி.கலியாணசுந்தரன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
திரு.வி.கல்யாணசுந்தரனார் :

கட்டுரைகள் :

கௌரா பதிப்பக குழுமம் :