சிவில் சட்டம் தெரிந்துகொள்ளுங்கள்

ஆசிரியர்: ஆசிரியர் குழு

Category சமூகம்
Formatpaper back
Pages 240
Weight200 grams
₹120.00 ₹114.00    You Save ₹6
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866வெல்ல முடியாத வழக்குகளை வென்று தருவதாகச் சொல்லி, கட்சிக்காரருக்குத் தவறான நம்பிக்கையை ஊட்டு வது சிலரது வழக்கம். கட்சிக்காரருக்கு நீதிமன்றங்களின் நடைமுறையோ சட்ட நுணுக்கங்களோ தெரியாது. ஆகையால், அவரை எளிதில் ஏமாற்றிப் பணம் பறிக்கலாம் என்று எண்ணுகிறவர்கள் சிலர் உண்டு. இப்படிப்பட்ட வர் களிடமிருந்து ஒரு கட்சிக்காரர் தமது நலன்களைப் பாது காத்துக்கொள்ள வேண்டுமாயின், அவர் ஓரளவேனும் சட்ட அறிவைத் தேடிக்கொண்டே ஆகவேண்டியதிருக்கிறது.
அந்த ஓரளவு சட்ட அறிவைப் பெற விரும்கிறவர் களுக்காகவே, இந்த நூல் எழுதப்படுகிறது. இந்த நூலில் உள்ள விஷயங்களை ஒருவர் தெரிந்து வைத்துக் கொண்டால், அவரை நீதிமன்ற விவகாரங்களில் யாரும் எளிதில் ஏமாற்றி விட முடியாது. சட்ட ரீதியாகத் தம்முடைய உரிமைகள் யாவை- கடமைகள் யாவை என்பனவெல்லாம் அவருக்குத் தெளிவாகப் புரியும். வெல்ல முடியாத வழக்குகளை அவர் நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்லமாட்டார். எதிரியின் வழக்கைக் கண்டு அஞ்சவும் மாட்டார்.
எனவே, ஒருவர் தம்முடைய சட்டரீதியான உரிமை களை அறியாமையின் காரணமாகப் பறிகொடுத்து விடாமலும், தம் கடமைகளிலிருந்து வழுவாமலும். பிறரால் வஞ்சிக்கப் படாமலும், தெரியாத்தனமான தவறுகளைச் செய்துவிட்டு வீணான சங்கடங்களில் மாட்டிக்கொள்ளாமலும் ஒரு சிறந்த குடிமகனாக வாழ விரும்புவாராயின் அத்துறையில் அவருக்கு ஓரளவு வழிகாட்டுவதே இந்நூலின் குறிக்கோள் ஆகும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆசிரியர் குழு :

சமூகம் :

மணிமேகலைப் பிரசுரம் :