சிறையில் எனது நாட்கள் (வீரமங்கை ஜைனபுல் கஸ்ஸாலி மிஸ்ரி)

ஆசிரியர்: மு.குலாம் முஹம்மத்

Category வாழ்க்கை வரலாறு
Publication வேர்கள் பதிப்பகம்
FormatPaperback
Pages 272
First EditionAug 2008
Weight300 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 3 cms
$4      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் உள்பக்கம் பார்க்க Click Here

நாம் அல்லாஹ்வின் பாதையில் உறுதியாக நின்றால், அல்லாஹ் நிச்சயமாக நமக்கு உதவி செய்வான். அவன் நமக்கு பாதுகாப்பு அளிப்பான். அவனே நமக்கு உயர்வைத் தருவான். பூமியிலுள்ள எல்லா தீய சக்திகளும் அழிக்கப்பட்டு விடும். அல்லாஹ்வின் மார்க்கமே நிலைபெறும். இம்மையிலும் மறுமையிலும் இது நமக்கு வெற்றியைத் தந்திடும். 'ஹளரத் உமர் ரலிசொன்னார்கள் முஸ்லிம்கள் வெற்றி பெற்றதற்கான காரணம், முஸ்லிம்களின் எதிரிகள் அல்லாஹ்வை கீழ்படிந்திட மறுத்தார்கள். முஸ்லிம்கள் மனமொப்பி அல்லாஹ்வை கீழ்படிந்தார்கள். இல்லையேல் முஸ்லிம்கள் தங்கள் எதிரிகளை வென்றிடுவதற்கு போதுமான ஆள் பலத்தையோ ஆயுத பலத்தையோ பெற்றிருக்கவில்லை. இப்போதும் நாம் இஸ்லாத்தின் வழி காட்டுதல்களைப் புறக்கணித்தோம் 'என்றால் நாம் வெற்றிக் கொள்ளப்படுவோம் இந்த நூலில் ஜைனபுல் கஸ்ஸாலி.
தாங்கள் வாழ்ந்திடும் இடங்களில் இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்திட வேண்டும். அதில் தங்களுடைய முழு திறமையையும் பயன்படுத்திடவேண்டும். தங்கு தடையற்ற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். எதிர்ப்புகள் வரும், அவற்றை திருக்குர்ஆன் நபிவழி ஆகியவற்றின் நெறி நின்று எதிர்கொள்ளவேண்டும். எதிர்படும் இழப்புகளை யதார்த்தமாய் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த முயற்சியின் முடிவின் அல்லாஹ்வின் வாக்கை மேலோங்கச் செய்திட வேண்டும். இதையே வேறு சொற்களால் சொன்னால் இஸ்லாத்தை நிலைநாட்டிட வேண்டும். இந்த இலட்சியத்தை நெஞ்சில் நிறுத்தி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்திருக்கின்றோம். எதிரிகளின் எதிர்ப்புகள், அரசின் அடாவடித்தனங்கள் இவற்றையெல்லாம் எளிதாகவே எதிர்கொண்டு விடுகின்றார்கள், இந்த இலட்சியத்தை இதயத்தில் ஏந்தியவர்கள். ஆனால் இயக்கம் உயர்ந்து கண்முன்னே கூட்டங்களைக் கண்டு விட்டால் சூதும், வாதும் தலை தூக்குகின்றன. திசைமாறிப் போய்விடுகின்றார்கள். அவர்களை அவர்கள் போக்கில் விட்டுவிட்டு நாம் எடுத்தக் கொள்கையில் இலட்சியத்தில் உறுதியாக நின்றிருக்கின்றோம்.

உங்கள் கருத்துக்களை பகிர :