சிறுவர் நாடோடிக் கதைகள்

ஆசிரியர்: கி ராஜநாராயணன்

Category சிறுகதைகள்
Publication அன்னம் - அகரம்
FormatPaperback
Pages 103
First EditionJan 2009
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹80.00 ₹72.00    You Save ₹8
(10% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



எனது பிரியமுள்ள நண்பர் வீரவேலுசாமியின் சிறுவர் நாடோடிக் கதைகளுக்கு ஒரு முன்னுரை எழுத உட்காரும் இந்த வேளையில் அவரைப்பற்றிப் பல நினைவுகள் வருகின்றன. முதல் முதலில், இடைசெவலுக்கு அவரும் அவரது நண்பர் சுப்-கோ"வும் என்னைப் பார்க்க வருகிறார்கள். ஒவ்வொரு மே மாதம் பள்ளி விடுமுறையை இவர்கள் இப்படிக் கழிப்பது வழக்கம். கோவிலுக்கு மாதாந்தம் நடப்பது போல இவர்களுக்கு இது வருசாந்தம்! குறைந்தது மூன்று நாட்களாவது இடைசெவலில்த் தங்குவார்கள். காலையில் எழுந்ததும் எல்லாரும் "மந்தை "க்குப் போவது போல நாங்கள் ரோட்டுப் பக்கம் நடப்போம். இடைசெவல் ரோட்டில் (பேருந்து நிறுத்தம்) கருப்பசாமி செட்டியார் காப்பிக்கடையில் உட்கார்ந்து ஒரு காபி சாப்பிட்டுவிட்டு (வீட்டில் காபி சாப்பிட்டுப் போனாலும்) அங்கே பதிவாக ஒரு காபி சாப்பிடாவிட்டால் மண்டைப் பெருத்து தெறித்து விடும். "சுப்-கோ" வின் ஊர் நாச்சியார்ப்பட்டியிலும் ஊருக்குள் ஒரு கூரைவீட்டில் இப்படி ஒரு காபிக் கடை உண்டு.

உங்கள் கருத்துக்களை பகிர :
கி ராஜநாராயணன் :

சிறுகதைகள் :

அன்னம் - அகரம் :