சிறுவர்களுக்கு சின்னக் கதைகள்

ஆசிரியர்: கீர்த்தி

Category சிறுவர் நூல்கள்
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaperback
Pages 32
Weight50 grams
₹12.00 ₹10.80    You Save ₹1
(10% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



துறவியும் கந்தனிடம், “மகனே! எனக்கு உன் பொருள் மீது ஆசை எதுவும் இல்லை. உன்னைத் திருத்தவே நான் இவ்வாறு செய்தேன். இதுநாள்வரை இவை உன்னிடம் இருந்தபோது இல்லாத மகிழ்ச்சியையும் திருப்தியையும் இப்போது உன்னிடம் காண்கிறேன். நிறைய செல்வம் இல்லாவிட்டாலும், உழைப்பதற்கான உடல் ஆரோக்கியம் இருக்கிறது; உழைப்பிற்கேற்ற வருமானமும் கிடைக்கிறது. இவ்வூரிலுள்ள மக்களின் நம்பிக்கைப் பெற்றிருக்கிறாய்....இதையெல்லாம் விட்டுவிட்டு நீ பிறரைப் பார்த்து பொறாமைப்படுகிறாய். உன்னைவிட செல்வந்தர்கள் எத்தனையோ பேர் உடல் ஆரோக்கியம் இன்றி அவதிப்படுகிறார்கள். அவர்களைவிட நீ எத்தனையோ விதத்தில் உயர்ந்தவன் என்பதைப் புரிந்துகொள்! இனியேனும் பேராசையோ, பிறர்மீது பொறாமையோ கொள்ளாமல் இருப்பதைக் கொண்டு நிம்மதியாக வாழ்!" -என்று அறிவுரை கூறினார்.
துறவியைத் தான் தவறாக நினைத்துவிட்டோமே என்று வருந்திய கந்தன், தன் பேராசையையும், பொறாமையையும் விட்டு ஒழித்தான். அன்று முதல் அவன் மகிழ்ச்சியாக வாழத் தொடங்கினான்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கீர்த்தி :

சிறுவர் நூல்கள் :

சங்கர் பதிப்பகம் :