சிந்திக்க வைக்கும் சிறை அனுபவங்கள்

ஆசிரியர்: செந்தமிழ்க்கிழார்

Category
Publication நர்மதா பதிப்பகம்
FormatPaper Back
Pages 432
Weight400 grams
₹200.00 ₹190.00    You Save ₹10
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



நீதி கேட்ட நிரபராதி சிறைக்குப் போன கதை! சிறைச்சுவர்கள் எதிரொலித்த சத்தியத்தின் அடிச்சுவடிகள்!காந்தீயச் சுடர் செந்தமிழ்க்கிழார்கவிதையையும் இலக்கியத்தையும் நேசித்து நல்லவராகவும், எளியவராகவும் அருப்புக் கோட்டையில் வாழ்ந்திருந்த செந்தமிழ்க்கிழாருக்கு (70) அநீதியாக ஒரு சட்ட சிக்கல் நேருகிறது. நமது மக்களாட்சி தத்துவம் பெரிதும் நம்பியிருக்கின்ற காவல்துறையும் நீதித்துறையும் சில அம்சங்களில் பலவீனப்பட்டு நிற்பதை கண்ணுறுகிறார். தென்னாப்பிர்க்காவின் ஒரு ரயில் நிலையத்தில் நடந்த ஒரு நிகழ்வு சாதாரண மோகன்தாஸ் காந்தியை மகாத்மா காந்தியாக பரிணாமம் பெற வைத்தது போல் இவரையும் அந்த நெருப்பு பற்றிக் கொள்கிறது. பணபலமோ, வலுவான பின்புலமோ பாரிஸ்டர் பட்டமோ இல்லாமலேயே இந்த எளிய மனிதர் சந்தித்த கோர்ட் வழக்குகளும், டிக்‌ஷனரியை படித்து கற்ற ஆங்கில மொழியறிவோடு உச்சநீதி மன்றத்தில் முறையீடு செய்து வெற்றிபெற்றதும் இந்நூலில் கதை போல் விரிகின்றன.சட்டத்திற்கு எதிராக நானும் செயல்படமாட்டேன், சட்டங்களை அசட்டையாக கையாள்கிறவர்களோடு உடன்படவும் மாட்டேன் என்று நிற்கிற இவரின் மனஉறுதி வியக்க வைக்கிறது. இவர் சிறையிலிருந்த நாட்களில், கடும் தண்டனை பெற்றூம் திருந்திடாத கைதிகளை இவர் மனமாற்றம் பெற செய்ததும், அங்கே ‘கஞ்சித்தொட்டி’ திறப்பு விழா நடத்தியதும் நமது முதுபெரும் அரசியல்வாதிகள்கூட சிறையிலிருந்தபோது நிகழ்த்தியிராத அரிய ஞான ஸ்நான நிகழ்வுகள்.‘எனது நூல்களை எவரும் பதிப்பித்துக் கொள்ளலாம், உரிமை மக்களுடையது. எனக்குப் பணம் வேண்டாம்’ என்று அறிவித்த எழுத்தாளர் உலகிலேயே இவர் மட்டுமாகத்தான் இருப்பார். இத்தனைக்கும், இவர் எழுதிய ‘ நீங்களும் கோர்ட்டில் வாதாடலாம்’ நூல் இதுவரை 60 பதிப்புகள் கண்டுள்ளது.இவரது நூல்கள் ஆன்மீகத்திலிருந்து இயற்கை வைத்தியம் வரை பேசுகின்றன. மணவாழ்வு பிரச்சனைகளுக்கும் கி.ஆ.பெ. விசுவநாதம் போன்றே எளிய நடைமுறை தீர்வுகளை தருகிறார்.தமிழ்நாட்டில் பிறந்தாலேயே கட்டபொம்மனும், வ.உ.சி.யு.ம், மருது சகோதர்களும், வேலுநாச்சியாரும், வாஞ்சிநாதனும் பேசப்படாமலேயே மங்கிப் போனார்கள். புது டில்லிக்கு வெகு தொலைவில் பிறந்துவிட்ட காரணத்தாலேயே இந்தத் தமிழ்நாட்டு கெஜ்ரிவால் இன்று மே மாத வெய்யிலில் பஸ்ஸுக்கு காத்து நிற்கிறார். தமிழர்கள் இவருக்கு கார் தர வேண்டாம், கையிலிருக்கிற குடையை பற்க்காமல் இருந்தால் சரி - இப்படிக்கு பதிப்பாசிரியர்.இந்நூலின் புத்தக மதிப்புரை தின்ததந்தி நாளிதல் தேதி 24.06.2015 அன்று.மருத்துவக் கல்லூரி மாணவர் நாவரசுவை சக மாணவர் ஜான் டேவிட் கண்டம் துண்டமாக வெட்டிக் கொலை செய்தார். இந்த வழக்கில் ஜான் டேவிட்டுக்கு கடலூர் அமர்வு நீதிமன்றம் இரண்டு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.இதை எதிர்த்து ஜாண்டேவிட் சார்பில் சென்னை ஜகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி ஜான் டேவிட்டை விடுதலை செய்தனர். இது குறித்து ஜகோர்ட்டு நீதிபதிகளுக்கு நோட்டீசு அனுப்பி விளக்கம் கேட்டார். , செந்தமிழ்க்கிழார். இதனால் நீதிமன்ற அவதூறு வழக்கில் அவருக்கு 6 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.தண்டனைக் கைதியாக அவர் சென்னை மற்றும் வேலூர் சிறையில் கழித்த நாட்களையும், அனுபவங்களையும் கலைபட சொல்கிறார். மேலும் குற்றவாளிகள் எப்படி உருவாகிறார்கள். அவர்களைத் திருத்துவதற்கு என்ன வழி அன்பதையும் எடுத்துக் கூறுகி்றார். இந்நூல் ஆசிரியர்.

உங்கள் கருத்துக்களை பகிர :
செந்தமிழ்க்கிழார் :

நர்மதா பதிப்பகம் :