சிந்திக்க மறுப்பது ஏன்...!

ஆசிரியர்: ப.பார்த்திபன்

Category கட்டுரைகள்
Publication மதி பப்ளிகேசன்
FormatPaperback
Pages 192
Weight200 grams
₹120.00 ₹108.00    You Save ₹12
(10% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஅதானிக்கு ஒரு சட்டம், அம்பானிக்கு ஒரு சட்டம், சல்மான்கானுக்கு ஒரு சட்டம், அரசியல்வாதிகளுக்கு ஒரு சட்டம், மற்றும் சோற்றுக்கு வழியில்லாத அன்னாடங்காய்ச்சிகளுக்கு ஒரு சட்டம் எனில்; இது எப்படி நேர்மையானதாக இருக்கமுடியும்? கேட்டால் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை வைத்து தப்பிவிடுகிறார்கள் என்று ஆண்டாண்டு காலமாக சொல்லப்படுகிறதே, மனிதனையே காக்க பயன்படாத இந்த சட்டமும் நீதித்துறையும் எதற்கு?

ஒரு சினிமாக்காரன் அவன் தயாரித்த படத்தை திரையிட வழக்கு தொடரும் பட்சத்தில்; விடுமுறை நாள் என்றுகூட பார்க்காமல்; அதைவிடுங்கள் இரவுபகல் பார்க்காமல் சிறப்பு அமர்வு என்கிறப் பெயரில் உடனே தீர்ப்பு அளிப்பதும், தண்டனை காலத்தைவிட அதிகமாக ஆயுள் தண்டனையை அனுபவித்த பின்னரும், அவர்கள் மீது எந்தவித அக்கறையும் காட்டாமல், தெரிந்தும் தெரியாததுபோல் நடந்துகொள்வதும் எந்த வகையான இந்திய அரசியல் மற்றும் குற்றவியல் தண்டனை சட்டம் சொல்வீர்?

இவரது கேள்விகள் (சிந்தனைகள்) யாவும் விசாலப்பார்வையுடனான நோக்கங்களைக் கொண்டவை. இந்நூலில் வாழ்ந்திருக்கும் கருத்துக்கள் ஒவ்வென்றும், அதற்கேயுரிய கேள்வியுடன் பகுத்தறிவு சிந்ததனைகளை ஒலிக்கச் செய்கின்றன. தனக்குத் தோன்றிய சமுக அரசியல் பொருளாதார சிந்தனைகளை, இச்சமூகத்திற்கு கொண்டுசேர்க்கும் விதமாக இந்நூல் அமையப்பெற்றிருந்தாலும்; இந்த மண்ணின் மீதும், மக்களின் மீதும் அவர் கொண்டிருக்கும் அக்கறையும், சக மானுடத்தின் மீதான அவரது அன்பையும் இந்நூலில் வழியெங்கிலும் காணமுடிகிறது. பொறியாளர் பார்த்திபன்.ப அவர்களின் சீரிய முயற்சியை வாழ்த்தி வரவேற்பதோடு, இதை மிக அழகுடன் வாசகராகிய உங்களின் கைகளில் தவழச்செய்வதில், மதி பப்ளிகேசன் உண்மையில் பெருமையும், பேருவகையும் அடைகிறது!!!

உங்கள் கருத்துக்களை பகிர :
ப.பார்த்திபன் :

கட்டுரைகள் :

மதி பப்ளிகேசன் :