சிந்தனை ஒன்றுடையாள்

ஆசிரியர்: கே.எஸ்.சுப்பிரமணியன்

Category நவீன இலக்கியம்
Publication நமது நம்பிக்கை
FormatPaperback
Pages 512
First EditionAug 2015
Weight550 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 3 cms
₹350.00 ₹332.50    You Save ₹17
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereடாக்டர் கே.எஸ். சுப்பிரமணியன் (1937) திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இளம் வயதில் ஏழ்மைச் சூழலில், தன் அஸ்திவாரப் பருவத்தின் 10 ஆண்டுகள் ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லத்தின் கொடை நிழலில் வளர்ந்தவர். இந்திய அரசுப் பணியில் (IRAS) 15 ஆண்டுகளும் (1960-1975) ஆசிய வளர்ச்சி வங்கியில் 22 ஆண்டுகளும் (1975-1998)பணிபுரிந்து. ஓர் இயக்குநராகப் பணி ஓய்வு பெற்றார். 1998ஆம் ஆண்டு தாய்நாடு திரும்பியதிலிருந்து இலக்கிய, சமூகப் பணிகளில் - ஈடுபாடு கொண்டுள்ளார். முப்பதுக்கும் மேற்பட்ட தமிழ் இலக்கியப் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளார். இவற்றில் , நாவல்கள். குறு நாவல்கள், சிறுகதை / கட்டுரை / கவிதைத் தொகுப்புகளும் அடங்கும். இலக்கிய சமூக, வளர்ச்சிக் களன்களைத் தழுவிய இவரது தமிழ்க்கட்டுரைகள் ஏழு தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. 1 'பாரத் ரத்னா' சி. சுப்பிரமணியம் அவர்கள் நிறுவிய தேசிய வேளாண் நிறுவனத்திலும், தமிழ் மொழி / பண்பாட்டு ஆய்வுமையமான 'மொழி', அறக்கட்டளையிலும் அறங்காவலராகப் பணியாற்றி வருகிறார். 'சாகித்ய : அகாதமியின் தமிழ் ஆலோசனைக் குழு உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார். தமிழும் ஸம்ஸ்க்ருதம் இந்தியாவின் மிகத் தொன்மையான செம்மொழிகள். இவற்றிடையேயான உறவு 2000 ஆண்டுகளுக்கும் மேற்பட்டது. ஆன்மிகம், தத்துவம், மனிதநேயம், வாழ்வியல் விழுமியங்கள், அரசு நிர்வாகம், அழகியல் போன்ற பல களங்களிலும் இவ்விருமொழி இலக்கியங்களில் பொதுமையான , ஓட்டத்தைக் காண முடிகிறது. இந்தக் கூறுகளை இனங்கண்டு பதிவு செய்யும், ஓர் எளிய தேடல் முயற்சிதான் இந்நூல். இந்த நாலில் 480 ஸம்ஸ்க்ருத மேற்கோள்களும், 790 தமிழ் மேற்கோள்களும், இடம் பெற்றுள்ளன. தமிழ் இலக்கிய மேற்கோள்கள் காலவரம்புகளால் கட்டுப்படுத்தப்படாமல் தொல்காப்பியம், சங்க இலக்கியம் தொடங்கி நவீன இலக்கியம் வரை வியாபகம் கொண்டுள்ளன. இரு பண்டைய இந்தியச் செம்மொழிகளிடையே இணையாகப் பரிணாமம் கொண்டுள்ள சிந்தனையோட்டத்தைப் பற்றிய புரிந்துணர்வுக்கும், இந்த இரண்டு மொழி ஆர்வலர்களிடையே ஒத்திசைவுக்கும், ஓரளவாவது வழிவகுக்கும், 'என்ற நம்பிக்கையே இந்நூலின் அடித்தளம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
நவீன இலக்கியம் :

நமது நம்பிக்கை :