சித்திர பாரதி

ஆசிரியர்: ரா.அ. பத்மநாபன்

Category வாழ்க்கை வரலாறு
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatHardBound
Pages 214
ISBN978-81-89359-61-4
Weight0.96 kgs
₹595.00 ₹565.25    You Save ₹29
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866பாரதி நூற்றாண்டை முன்னிட்டு நூவின மறுபதிப்பு கொண்டுவர நான் பல்லாண்டுகளாக செய்துவந்த முயற்சிகள் பலிக்கவில்லை. செலவை கருதிப் பல வெளியீட்டாளர்கள் தயக்கம் காட்ட தால் நான் மனம் குன்றிச் சோர்வுற்றிருந்த காலை வாடும் பயிர்க்கு வான்மழையென இப்பெரும் பணியைப் பூர்த்தி செய்துவைக்க முன்வந்தார் பொள்ளாச்சிப் பெருவள்ளல் நா. மகாலிங்கம் அவர்கள். இதை பாரதியார் சங்க நூற்றாண்டு விழா வெளியீடாகக் கொண்டு வரவும் அவர் வகை செய்தது இரட்டிப்பு மகிழ்ச்சியாகும். தமிழுககும் இறைப்பணிக்கும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ள தகைமையாளர் மகாலிங்கம் அவர்களுக்கும், அவர்களை நான் அணுகி அவர் ஆதரவு பெறுவதற்கும், அதன்பின் நூலின் அச்சுவேலை முதலிய சகல காரியங்களுக்கும் உற்சாகத்துடன் உதவிபுரிந்துள்ள எனது நெடுநாள் அன்பர் பகீரதன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன்.
பாரதப் பண்பாட்டின் ஆணிவேர் ஆத்ம சித்தியாகும். நானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டினிலே என்று தம்மை ஒரு சித்த புருஷனாக விவரித்துக் கொண்டார் பாரதியார். செத்தபிறகல்ல இன்றே, இப்பொழுதே முக்தி என்றார். அத்தகைய ஆத்ம சித்திக்கான இலக்கியமாக விளங்கும் அவரது நூல்களையும், அவரது நிகரற்ற வாழ்க்கைச் சாதனைகளையும் நாம் மீண்டும் மீண்டும் துய்த்து நாமும் வீர வாழ்வு வாழ்ந்து விடுதலை பெறுவதே நாம் அப்பெரு மகனுக்குச் செலுத்தக்கூடிய மிகச் சிறந்த காணிக்கையாகும். அப்பணியில் 'சித்திர பாரதி' உதவும், திண்ணம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ரா.அ. பத்மநாபன் :

வாழ்க்கை வரலாறு :

காலச்சுவடு பதிப்பகம் :