சித்தர்கள் கண்ட விஞ்ஞானம் - தத்துவம்

ஆசிரியர்: சாமி. சிதம்பரனார்

Category சித்தர்கள், சித்த மருத்துவம்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaper back
Pages 128
Weight150 grams
₹60.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



சித்தர்களின் வைத்திய நூல்கள், அவர்களின் தத்துவங்கள், நம் முன்னோர்கள்; நமக்குச் சேமித்து வைத்திருக்கும் ஒப்பற்ற உயர்ந்த செல்வங்களாகும். அவற்றைப் பாதுகாத்து, வளர்த்து, அவற்றின் பயனை அனுபவிக்கக் கூட நமக்குத் திறமையில்லையென்றால், உலக அரங்கிலே நாம் எப்படித் தலைநிமிர்ந்து நிற்க முடியும்?
சித்தர் வைத்தியச் சிறப்பையும், சித்தர்களின் தத்துவங் களையும், தமிழ் மக்கள் உணர வேண்டும். அவற்றை வளர்க்க வேண்டும் என்ற கருத்துடனேயே இந்நூல் எழுதப்பட்டது.
இந்நூலில் சித்தர் வைத்தியச் சிறப்பு எடுத்துக் காட்டப் பட்டுள்ளது; சித்தர்களின் தத்துவம், அவர்கள் பாடல்களிலிருந்து விளக்கப்பட்டுள்ளது. சித்தர்கள் தத்துவத்தைப் பற்றிய உண்மையான நூல் ஒன்று வெளிவர வேண்டும் என்னும் ஆசையுடன் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
சித்தர் நூல்களிலே தேர்ந்தவர்கள் இந்நூலிலே பல குறைகளைக் காணலாம். சித்தர் நூல்களிலே, நமக்கு ஆராய்ச்சியோ, அனுபவமோ இல்லை. ஆயினும், தெரிந்ததை வெளியிட்டால், இதில் தவறுகள் இருக்கின்றன என்பதை விளக்கவாவது, உண்மையான சித்தர் தத்துவ விளக்க நூல் ஒன்று தோன்றாதா? சித்தர்களின் தத்துவம் அறிந்தவர்கள் எழுத முன்வர மாட்டார்களா? என்ற ஆசைதான் இந்நூல் எழுதுவதற்கு முதன்மையான தூண்டுதலாகும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சாமி. சிதம்பரனார் :

சித்தர்கள், சித்த மருத்துவம் :

கௌரா பதிப்பக குழுமம் :