சித்தர்கள் கண்ட யோகா மற்றும் மூலிகை நரம்புத்தளர்ச்சி நீங்க

ஆசிரியர்: ஜெகாதா

Category சித்தர்கள், சித்த மருத்துவம்
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaperback
Pages 48
Weight50 grams
₹20.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



நரம்பு மண்டலம் நரம்புகள் அனைத்தும் மூளையின் கட்டளைப்படி இயங்குபவை. நரம்பு மண்டலத்தின் கட்டுப்பாட்டு அறை மூளை. எல்லா நரம்புகளும் முதுகெலும்புத் தண்டின் வழியாகவே மூளையைச் சென்று எட்ட வேண்டும். இந்த முதுகெலும்பு என்பது ஒரே எலும்பல்ல. மோதிரங்களைப் போன்ற வளையங்கள் ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கப்பட்ட கோவை. எலும்புகளை அடுக்கும்போது நடுவில் ஏற்படும் துளையின் வழியாகவே நரம்புகள் செல்கின்றன. எல்லா நரம்புகளும் கழுத்துக்குப் பின்புறம் உள்ள பிடரியில் இணைக்கப் பட்டு மூளைக்குச் செல்கின்றன. திரிகாலமும் உணர்ந்த ஞானச்சித்தர்கள் தம் உடலைத் தாமே ஆராய்ந்து தேக ரகஸ்யம்யாவும் அறிந்து கூறியிருக்கிறார்கள். எல்லா நரம்புகளையும் சேர்த்து பிடரியில் எழுத்திரண்டாயிரம் நாடிகள் கோர்த்து நிற்கின்றன என்று யூகி முனிவர் கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஜெகாதா :

சித்தர்கள், சித்த மருத்துவம் :

சங்கர் பதிப்பகம் :