சித்தர்கள் கண்ட ஜோதிடம்

ஆசிரியர்: ப.நாகலிங்கம்

Category சித்தர்கள், சித்த மருத்துவம்
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaperBack
Pages 96
Weight100 grams
₹35.00       Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866நம்மைச் சுற்றியுள்ள புற உலகங்களின் அறிவே வானவியல் எனப்படும். புற உலகங்களின் மாற்றங்கள் நம்மை ப்படிப் பாதிக்கிறது என்பதைச் சொன்னால் அது ஜோதிடமாகும். நம்மைச்சுற்றியுள்ள கிரகங்களின் தண்மைகள், அவை வெளியிடும் கதிர்வீச்சுகள், அவற்றின் சுழல் தன்மைகள் ஆகியவற்றை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ரிஷிகள் கண்டு சொன்னார்கள்
நமது உடல் ஐம்பூதங்களால் ஆனது. நம்மைச் சுற்றியுள்ள புற உலகங்களும் ஐம்பூதங்களால் ஆனது. எனவே அவற்றில் ஏற்படும் மாற்றங்கள் நமது உடல் நிலையையும் மனத்தையும் பாதிக்கிறது, மனம் மாறினால் சிந்தனைமாறும், சொல் மாறும், செயல் மாறும். கிரகங்களின் சுழற்சியால் கதிர்வீச்சு எப்படி மாறும் அதனால் ஏற்படும் மாற்றங்கள் என்ன என்று அறிந்து சொல்வதே ஜோதிடமாகும். (இது முழுக்க அறிவியல் சார்ந்த கணக்கே தவிர கற்பனைகள் இல்லை. இந் நூலில் இரண்டு ரிஷிகளின் ஜோதிடத்தைத் தொகுத்துக் கொடுத்துள்ளேன்.
கிரகங்களைப் பற்றி தெரிந்துக் கொள்ள தற்போது எவ்வளவோ வசதிகள் உள்ளன. ஆனால் எந்த வித அறிவியல் கருவிகளும் இல்லாத அந்தக் காலத்தில் வெறும் கண்களாலேயே இவற்றைக் கண்டு சொல்லியிருக்கிறார்கள் என்றால் அது மிகவும் வியப்பிற்குறியது. நாம் ஒருபுறம் அறிவியலில் வளர்ந்துள்ளோம் என்றாலும் அந்தக் கால அளவிற்கு வளரவில்லை என்று சொல்லலாம். அக் காலத்திய செய்திகளையே நாம் இன்னும் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை.

உங்கள் கருத்துக்களை பகிர :
ப.நாகலிங்கம் :

சித்தர்கள், சித்த மருத்துவம் :

சங்கர் பதிப்பகம் :