சாலைப் பாதுகாப்பு (சாலை விபத்துகளைத் தவிர்க்க 50 விளக்கப்படங்களுடன் )

ஆசிரியர்: சங்கர ராஜு

Category பொது நூல்கள்
Publication மணிமேகலைப் பிரசுரம்
FormatPaper Back
Pages 198
Weight200 grams
₹60.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866பள்ளிக்கும், 'கல்லூரிக்கும் செல்பவர்களுக்கு உடனடியாக சாலை பாதுகாப்பைப் பற்றி போதிக்க வேண்டியது மிகவும் அவசியம். மேல்நிலைக் கல்வியில் இதை ஒரு பாடமாக வைத்து முறையாக மாணவர்களுக்கு பயிற்றுவிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் மாணவர்கள் தங்கள் வாழ்நாளில் ஒழுக்கமாகவும் சாலைவிதிகளை மீறாமலும் சாலைகளைப் பயன்படுத்துவார்கள் என்பது என்னுடைய கருத்து.
மேலும், நகரங்களிலும், மாநகரங்களிலும் "சாலை பாதுகாப்புப் பயிற்சி நிலையங்களை " தொடங்கி அவைகள் இரவு பகல் பாராமல் செயல்பட வேண்டும். இதனை சமூக சேவைத் தொண்டு நிறுவனங்கள் செய்ய முன்வரவேண்டும்.
நல்ல சமயத்தில் இந்த நூல் தோன்றியிருக்கிறது. நிச்சயமாக, பல வருடங்களாக, இந்நூலின் ஆசிரியர் எடுத்துக்கொண்ட முயற்சியும், உழைப்பும்தான் இந்நூலை உருவாக்க முடிந்திருக்கிறது.
இந்நூலைப் படிக்கும் ஒவ்வொருவரிடமும் நான் வேண்டிக்கொள்வது, உங்களுடைய நண்பரையும், சுற்றத்தாரையும் இந்நூலைப் படிக்கச் சொல்லுங்கள். படிப்பதோடு மட்டுமல்லாமல் இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை சாலைகளைப் பயன்படுத்தும்போது, கட்டாயமாக கடைப்பிடிக்கச் செய்யுங்கள். பல லட்சம் சாலை உபயோகிப்பாளர்கள் இந்நூலினால் பெரிதும் பயனடைவார்கள் என்பது திண்ணம். அவர்கள் இந்நூலை இயற்றிய திரு. சி. சங்கர ராஜூ அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டவர்கள் ஆவர்.
அரிமா. என். எஸ்.சங்கர்
மாவட்டத் தலைவர் சாலைப் பாதுகாப்பு (1996-97)
அரிமா மாவட்டம் - 324 AI.

உங்கள் கருத்துக்களை பகிர :
பொது நூல்கள் :

மணிமேகலைப் பிரசுரம் :