சாம்பலில் துளிர்த்த நம்பிக்கை

ஆசிரியர்: வ. எலியாஸ் ராஜா

Category சமூகம்
Publication அகநி வெளியீடு
FormatPaperback
Pages 128
Weight150 grams
₹100.00 ₹90.00    You Save ₹10
(10% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



உயர்ந்த மானுட விழுமியங்களை போதிக்கும் கிறித்தவம் இந்தியாவில் மட்டும் எப்படி சாதிக்கு துணை போனது என்ற கேள்வியை தீரா கோபத்துடன் எழுப்புகிறது இந்நூல். 'இந்தியச் சமூகத்தில் சாத்தான் என்பது சாதியை தவிர வேறொன்றுமில்லை' என்கிற நூலாசிரியரின் தெளிந்த கருத்தியல் இந்திய கிறித்தவ திருஅவையின் சாதியப் போக்கை சமரசமின்றி கட்டுடைக்கிறது. சாதியை கைவிட முடியவில்லை எனில், திருமுழுக்கு வெறும் முழுக்குதான் என்கிற வரிகள் வெள்ளை அங்கிக்குள் மறையும் சாதிய இருட்டை கிழித்து தொங்கவிடுகின்றன. விடுதலைக் களத்தில் பல வினாக்கள் வெடித்து எழுவதற்கான வெப்பத்தை அடைகாக்கும் இந்நூல் தமிழ்ச்சூழலில் வலுவான அதிர்வுகளை ஏற்படுத்தும் என உறுதியாய் நம்புகிறேன்.
- ம.செ.சிந்தனை செல்வன்.
விளிம்புநிலை மக்களின் சமூகப் பொருளாதார கலாச்சார மற்றும் அரசியல் ஒடுக்கு முறைக்கு எதிரான விடுதலைக் குரலாகத் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருப்பவர் எலியாஸ்ராஜா. 'சாம்பலில் துளிர்த்த நம்பிக்கை' என்னும் இந்நூல் தனிமனித வாழ்க்கையோடு சுருங்கிப் போகாமல் பொது வாழ்க்கைக்கெனத் தன்னை அர்ப் பணித்து, தடைகள் பல கடந்து, தன்னலமின்றி ஆற்றிவரும் சமூகப் பணிகளால் ஒரு வாழும் வரலாறாய் திகழும் எலியாஸ்ராஜாவின் ஒவ்வொரு கள அனுபவமும் இன்றைய தலித் கிறித்தவ இளையோர் கற்க வேண்டிய சமூகப் பாடமாகும்.
- பேராசிரியர் கு.சின்னப்பன்.
நம்பிக்கை தரும் பேரமைதிக்கு முன்பாக சுழன்றடித்த புயல் என்பது நினைத்துப் பார்க்கவும் ஒண்ணாத கொடியது அல்லவா! அப்படிதான் என்னால் பார்க்க முடிகிறது. எலியாஸ்ராஜாவின் இந்த சாம்பலில் துளிர்த்த நம்பிக்கையை, இந்நூலில் உள்ள ஒவ்வொரு கட்டுரையும் வாசகனின் மனதில் ஒரு துயரைக் கடத்துவது மட்டுமல்லாமல் துரோகத்தின் முகமூடிகள் கழண்டு விழுவதையும் காணமுடியும். வெற்றியாளரின் அனுபவங்களை வரலாறு வரவுவைத்துக் கொள்ளும் சூழலில் இந்த துயரில் பூத்த நம்பிக்கையையும் வரவு வைத்துக் கொள்ளாமல் இருக்க முடியாது.
- கவிஞர் ஜே.தமிழ்ச்செல்வன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சமூகம் :

அகநி வெளியீடு :