சாந்தோக்ய உபநிஷதம்
ஆசிரியர்:
சுவாமி ஆசுதோஷானந்தர்
விலை ரூ.275
https://marinabooks.com/detailed/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AF+%E0%AE%89%E0%AE%AA%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D+?id=1744-4321-3548-6660
{1744-4321-3548-6660 [{புத்தகம் பற்றி ‘தினமும் தியானம் செய்யுங்கள், எல்லா கதவுகளும் உங்களுக்காகத் திறக்கும்' என்பார் சுவாமி விவேகானந்தர். தியானம் என்றதும் நம் முன் எழுவது மனதிற்குப் பிடித்த தெய்வத்தின் வடிவத்தை இதயத்தில் தியானிப்பது. ஆனால் உபநிஷதங்களில் தியானம் என்பது இந்தக் கருத்தில் பயன்படுத்தப்படவில்லை என்றே கூறிவிடலாம்.
<br/>உபநிஷதங்களைப் பொறுத்தவரை தியானம் என்றால் ஆழ்ந்த சிந்தனை. 'உங்கள் மனத்திற்கு இதமான எந்தப் புனிதமான விஷயங்களையும் சிந்தனை செய்யுங்கள். இயற்கையின் அடிப்படை மூலகங்களைத் (பஞ்சபூதங்கள்) தியானித்தால் நீங்கள் இயற்கையை அடக்கியாளலாம்' என்கிறார் சுவாமி விவேகானந்தர். இத்தகைய தியானங் களையே பெரும்பாலும் உபநிஷதங்கள் உபதேசிக்கின்றன.இத்தகைய தியானங்களின் வாயிலாக வளமான வாழ்க்கையைப் பெறலாம் என்பது உபநிஷதங்களின் ஆணித்தரமான கோட்பாடு. கல்வி, செல்வம், பிள்ளைச் செல்வம், கால்நடைச் செல்வம், துணிமணிகள், புகழ்மிக்க வாழ்க்கை , வசீகர ஆற்றல் என்று அனைத்திற்கும் உபநிஷதங்களில் தியானங்கள் உபதேசிக்கப்படுகின்றன. குறிப்பாக, சாந்தோக்ய உபநிஷதம் இத்தகைய பல தியானங்களைப்பற்றி கூறுகிறது.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866