சாந்தாஸ் கேக்ஸ்

ஆசிரியர்: சாந்தா ஜெயராஜ்

Category சமையல்
Publication விகடன் பிரசுரம்
Pages N/A
₹110      

Out of Stock!

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

பிறந்தநாள், கல்யாண நாள், கிறிஸ்துமஸ்,
நியூ இயர்... என்று எந்தக் கொண்டாட்டமாக இருந்தாலும், அதில் தவறாமல் இடம்பெறுவது கேக்குகள்தான். சுவையான, வண்ணமயமான கேக்குகள் செய்வது ஒரு தனி கலை.
கேக் செய்முறை _ அலங்காரம் எனும் கலை நமது கற்பனைத் திறனும், கைவிரல் நுணுக்கங்களும் ஒருங்கிணைந்து, மனதை உவகை கொள்ளச் செய்யும் அற்புதமான கலை. இது மேலை நாட்டில் உருவான கலையாக இருந்தாலும், அவர்களது கலை நுணுக்கங்களையும் செய்முறைகளையும், நமது கலாசாரம், பண்பாட்டுக்கு ஏற்ற வகையில் மாற்றியமைத்து, நமது கலை வடிவங்களைக் கேக்கிலே அமைத்து ஒரு புதுப் பரிமாணத்தை ஏற்படுத்துகிறார் நூலாசிரியர் சாந்தா ஜெயராஜ்.
இந்நூலில் அடங்கியுள்ள செய்முறைகள்,
நீங்கள் எளிதில் கற்றுக்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. கேக் செய்வதற்கான உபகரணங்கள், பொருட்கள், செய்முறைகள் விளக்கப்படங்களுடன் தரப்பட்டிருக்கின்றன. ஆரம்ப நிலையில் பயிற்சி செய்பவர்கள்
படங்களைப் பார்த்துச் செய்யும் விதத்தில்
இந்த நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சித்திரமும் கைப்பழக்கம் என்பது போல பொறுமையுடன் கூடிய இடைவிடாத பயிற்சி நல்ல பலன் அளிக்கும். வயது வரம்பின்றி, ஆண் பெண் பே

உங்கள் கருத்துக்களை பகிர :