சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு சித்த மருத்துவரின் கடிதம்

ஆசிரியர்: டாக்டர்.ஜெரோம் சேவியர்

Category சித்தர்கள், சித்த மருத்துவம்
Publication காவ்யா பதிப்பகம்
FormatPaper back
Pages 237
First EditionJan 2018
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
₹260.00 $11.25    You Save ₹26
(10% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereசித்த மருத்துவத்தில் முறையாக பட்டப் படிப்பும் பட்ட மேற்படிப்பும் பெற்றுள்ள டாக்டர் ஜெரோம் சேவியர் எழுதியுள்ள 'சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு சித்த மருத்துவரின் கடிதம் ' என்ற இந்தப் புத்தகம் சர்க்கரை நோய் குறித்த பல புதிய தகவல்களைத் தருகிறது.

சர்க்கரை நோயைக் குணப்படுத்த முடியாது என நவீன மருத்துவம் கூறி வரும் நிலையில், நீரிழிவை சித்த மருத்துவம் 20 வகைப்படுத்துவதும், அதில் 4 வகை மட்டுமே குணமாகாது எனவும் , 10 வகைகளை முழுவதும் கட்டுப்படுத்த முடியும் என்பதும், மேலும் 10 வகை நீரிழிவுகளை முழுமையாக குணப்படுத்த முடியும் என்பதும் முற்றிலும் புதிய தகவல்.

'சர்க்கரை நோயாளிகளுக்கான உணவு முறை' - எனப் பொதுவான பட்டியலை நவீன மருத்துவ முறை கொடுக்கிறது.
ஆனால் அனைத்து சாக்கரை நோயாளிகளையும் வாத உடலினர். பித்த உடலினர், கப உடலினர் எனப் பிரித்து அவரவர்களுக்கான தனித்தனி உணவுப் பட்டியலைத் தந்திருப்பது மிகவும் சிறப்பு.

உணவு மட்டுமல்லாது சர்க்கரை நோயாளிகளுக்கான உடற்பயிற்சி, மூச்சுப் பயிற்சி, எண்ணெய் குளியல் போன்ற அநேக நுணுக்கமான வாழ்வியல் முறைகளை மிகவும் எளிதாக விளக்கியிருக்கும் விதம் அருமை.

சாக்கரை நோயாளிகளுக்கு போகாசனங்களும் மருந்தைப் போன்றவையே என வலியுறுத்தி, அவர்கள் என்னென்ன யோகாசனங்கள் செய்ய வேண்டும் என்பதை படங்களுடன் விளக்கியிருப்பதும் சிறப்பு .

"மருத்துவ மாணவர்களும் இந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டும்" என சித்த மருத்துவக் கல்லூரியின் முதல்வர் அணிந்துரையில் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.

புத்தகத்தின் துவக்கத்தில் இதன் ஆசிரியர் சர்க்கரை நோயின் வரலாற்றைச் சொல்ல ஆரம்பிக்கும் விதமே அனைவருக்கும் இந்த புத்தகத்தைத் தொடர்ந்து படிக்கும் ஆவலைத் தூண்டும் விதமாக உள்ளது,

மொத்தத்தில் சர்க்கரை நோயாளிகள் மட்டுமல்லாது, அனைவரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய முக்கிய நூல் இது.


உங்கள் கருத்துக்களை பகிர :
டாக்டர்.ஜெரோம் சேவியர் :

சித்தர்கள், சித்த மருத்துவம் :

காவ்யா பதிப்பகம் :