சரித்திரச் சம்பவங்கள்

ஆசிரியர்: வாண்டு மாமா

Category இலக்கியம்
Publication கங்கை புத்தக நிலையம்
FormatPaper back
Pages 206
First EditionDec 2002
24th EditionFeb 2016
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
$3       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

கொளசிகன், வாண்டுமாமா - என்கிற வி. கிருஷ்ணமூர்த்தி, ஐம்பது ஆண்டு களுக்கும் மேலாகப் பத்திரிகைத் துறையில் இருப்பவர். பள்ளி நாட்களி லேயே சிறுகதைகள் எழுதத் தொடங்கியவர். எழுத்தோடு ஓவியத்திலும் ஆர்வங் கொண்டவர் கௌசிகன், ஓவியராக வேண்டுமென்ற கனவோடு ஆனந்த விகடனில் பிரபல கேலி சித்திரக்காரர் 'மாலி'யின் கீழ் ஓராண்டு பணியாற்றினார். இக்கால கட்டத்தில் திரு. மாலியினால் குழந்தைகளுக்கு எழுதும்படி ஊக்குவிக்கப்பட்டு வாண்டுமாமா' என்கிற குழந்தை எழுத்தாளராக மாறியவர் கிருஷ்ணமூர்த்தி,
வானவில் - கிண்கிணி போன்ற குழந்தைகள் பத்திரிகைகளை திருச்சியி லிருந்து வெளியிட்டு 'வாண்டுமாமா' என்ற பெயர் பிரபலமாயிற்று. திருச்சியில் திருலோகசீதாராம் ஆசிரியராக இருந்த 'சிவாஜி'யில் துணை ஆசிரியராக அவரிடம் பயிற்சி பெற்று, திரு. அரு. ராமனாதனின் 'காதல்' பத்திரிகையில் சில காலம் பணி யொற்றிய பின், பிரபல கல்கி பத்திரிகையில் துணையாசிரியராக 23 ஆண்டுகள். அந்த ஸ்தாபனத்தினர் தொடங்கிய குழந்தைகள் இதழ் 'கோகுலத்துக்கு அஸ்திவாரமிட்டு திறம்பட நடத்தியவர் வாண்டுமாமா. தினமணிக் கதிரில் 4 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றபின் 'பூந்தளிர்' குழந்தைகள் பத்திரிகையின் ஆசிரியப் பொறுப்பேற்றுத் திறம்பட செயல்பட்டவர், தமிழ் பத்திரிகைகளில் சித்திரக் கதைகளை முதன் முதலில் அறிமுகப்படுத்திய பெருமை திரு வாண்டுமாமாவுக்கே உரியது. இதுவரை 150க்கு மேலான இவரது புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இதில் குழந்தைகளுக்கு மட்டும் 120க்கும் மேலானவை. இந்த வயதிலும் இவரது எழுத்துப்பணி தொடருகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :