சரஸ்வதி களஞ்சியம்

ஆசிரியர்: விஜயபாஸ்கரன்

Category மாத இதழ்கள்
Publication கலைஞன் பதிப்பகம்
FormatPaperback
Pages 936
First EditionJan 2001
2nd EditionJan 2013
Weight900 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 4 cms
₹350.00 $15    You Save ₹17
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866யார் வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் ஆசிரியராக இருந்திருக்க லாம். ஆனால் சரஸ்வதிக்கே ஆசிரியராக இருந்த பெருமை தமிழில் ஒரே ஒருவருக்குத் தான் உண்டு. அவர் சரஸ்வதி இதழின் ஆசிரியர் வ.விஜயபாஸ்கரன்.
ஏழே ஆண்டுகள்தான் நடந்தாலும் தற்கால இலக்கிய வரலாற்றில் தனிச்சுவடு பதித்தது சரஸ்வதி, வல்லிக்கண்ணன் 'சரஸ்வதி காலம்' என்ற தலைப்பில் மிகச் சிறந்த ஒரு நூலைப் படைக்கவும் அது காரணமாக அமைந்தது.
தமிழில் பின்னாளில் மகோன்னதமான படைப்பாளிகளாக உருவானவர்களெல்லாம் ஆரம்பத்தில் 'சரஸ்வதி கடாட்சம் பெற்றவர் கள்தான். ஜெயகாந்தன், சுந்தரராமசாமி, தொ.மு.சி.ரகுநாதன் எல்லோருமே சரஸ்வதி இதழில்தான் தங்கள் சாதனைகளுக்குப் பிள்ளையார் சுழி போட்டுக் கொண்டார்கள்.
இந்த மாதம் 24-ம் தேதி, முதல் நினைவு தினம் காணும் காலஞ்சென்ற டாக்டர் எஸ். ராமகிருஷ்ணனின் உன்னத இலக்கியம், தொடக்கத்தில் வெளிச்சத்திற்கு வந்தது சரஸ் வதி மூலம்தான். பேராசிரியர் நா. வானமாமலை, கிருஷ்ணன் நம்பி எல்லாருமே சரஸ்வதியின் படைப்பாளிகள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
மாத இதழ்கள் :

கலைஞன் பதிப்பகம் :