சமயம் ஓர் உரையாடல்

ஆசிரியர்: சுந்தர் காளி தொ. பரமசிவன்

Category ஆய்வு நூல்கள்
Publication அன்னம் - அகரம்
FormatPaperback
Pages 111
Weight150 grams
₹90.00 ₹85.50    You Save ₹4
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866தமிழ்நாட்டில் சமயம் பற்றிய சமூகவியல் ஆய்வுகள் இன்னும் தொடக்க நிலையில்தான் உள்ளன. சமயத்தின் பரிணாமம் குறித்த வரலாற்றியல் ஆய்வுகளைத் தாண்டிய புதிய அணுகுமுறைகள் அண்மைக்காலத்தில்தான் அறிமுகமாகியுள்ளன. மேலும், மேலோர் சமயம் தவிர்த்த கீழோர் சமயம், நாட்டார் சமயம் ஆகியன பற்றிய ஆய்வுகள் கடந்த இருபது ஆண்டுகளில்தான் தீவிரமடைந்துள்ளன. நாட்டார் வழக்காற்றியல், மானுடவியல், வரலாறு, தொல்லியல், கலைவரலாறு, சமய வரலாறு, சமய ஒப்பீட்டியல், தத்துவம், இறையியல் போன்ற பல துறைகளையும் தழுவிய பல்துறை ஆய்வாகவே இனிவரும் சமயம் பற்றிய ஆய்வுகள் இருக்க முடியும். இத்தகைய பல்துறை ஆய்வறிவு கொண்ட புலமையாளரான தொ.ப.வுடன் உரையாடக் கிடைத்த வாய்ப்பு என் பேறு என்றே கருதுகிறேன்.
தமிழ்நாட்டில் சமயம் பற்றிய கோட்பாட்டுரீதியான பிரச்சினைகள் பலவற்றை இவ்வுரையாடல் எழுப்புகிறது. இதுவரை பேசப்படாதிருந்த பல பகுதிகளை இது வெளிச்சத்துக்குக் கொண்டு வருகிறது. தமிழ்நாட்டு வரலாற்றின் முதல் கட்டமான சங்ககாலம் தொடங்கிப் பின்னிடைக் காலம்வரை நடந்த பல்வேறு நிகழ்வுகளை வரலாற்றுப் பின்னணியில் வைத்தும் கோட்பாட்டு அடிப்படையில் கண்டும் விளக்கிச் சொல்லுகிறது இவ்வுரையாடல்.
இந்த உரையாடலின் ஒரு சந்தர்ப்பத்தில் பெருங்கோயில்கள் பாழடையும் நாள் ஒன்றுவரும் என்கிறார் தொ.ப. வேறேதாகிலும் ஒரு வடிவத்தில் அன்றும் பிறகும்கூடச் சமய வாழ்வு தொடரும் என்பதே என் நம்பிக்கை.

உங்கள் கருத்துக்களை பகிர :
தொ. பரமசிவன் :

ஆய்வு நூல்கள் :

அன்னம் - அகரம் :