சந்திர ஹரி

ஆசிரியர்: பம்மல் சம்பந்த முதலியார்

Category நாட்டுப்புறவியல்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 80
First EditionJan 2008
9th EditionJan 2016
Weight100 grams
Dimensions (H) 19 x (W) 1 x (D) 13 cms
₹40.00 $1.75    You Save ₹2
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866நந்தனார் - கதையைக் - கலைவாணர் - கிந்தனார் என்று நடித்துக் காட்டியதனைப் போன்றும்; இராமாயணத்தை நடிகவேள் எம்.ஆர். இராதா கீமாயணம் என்று நடித்துக் காட்டியதனைப் போன்று - அரிச்சந்திரன் என்ற அந்த நாடகத்தைச் சந்திர அரி என்று நடித்துக் காட்டியுள்ளார், நாடகத் தந்தை பம்மல் சம்பந்தனார்.
கதையைத் தலைகீழாக மாற்றியதனைப் போன்று கதைத் தலைவனாகிய அரிச்சந்திரன் என்னும் மன்னனின் பெயரை அப்படியே சந்திர அரி என்றும் விசுவாமித்திரரை மித்திரவசு என்று இவ்வாறே எல்லாப் பெயர்களையும் தலைகீழாக மாற்றி அமைத்துள்ளார் பம்மல் சம்பந்தனார்.
சந்திர அரி என்னும் இந்த நாடக நூல் முதன் முதலாக 1923 ஆம் ஆண்டில் - வந்துள்ளது. இடையில் இரு பதிப்புகளே வெளிவந்துள்ளன. தமிழ்நாடு அரசு நாட்டுடைமை ஆக்கிய பின் முதன்முதலாக எங்களது பதிப்பகத்தின் சார்பாகச் “சந்திர அரி" நாடக நூல் வெளிவருகிறது என்பது மகிழ்ந்து இன்புறத்தக்கது.
நூற்றுக்கு மேற்பட்ட நாடகங்களை நிகழ்த்தி - பல நாடகங்களை - நூலாகவும் வெளியிட்டுள்ள - பம்மல் சம்பந்தனாரின் இந்தச் சந்திரஅரி என்னும் நாடக நூலை மிகச் சிறந்த முறையில் நாங்கள் வெளியிட்டுப் பெருமை கொள்கிறோம்.
மாணவரும் மாண்புடையோரும் வாங்குங்கள் - படியுங்கள் - நகைச்சுவைத் தேனைக் குடியுங்கள்; வயிறு வலிக்கச் சிரியுங்கள். முடிந்தால் நாடகமாக நடியுங்கள்.

பதிப்பகத்தார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பம்மல் சம்பந்த முதலியார் :

நாட்டுப்புறவியல் :

கௌரா பதிப்பக குழுமம் :