சந்தித்ததும் சிந்தித்ததும்
₹130.00 ₹126.10 (3% OFF)

சந்தித்ததும் சிந்தித்ததும்

ஆசிரியர்: வெ.இறையன்பு

Category சுயமுன்னேற்றம்
Publication விஜயா பதிப்பகம்
FormatPaperback
Pages 278
ISBN978-8184-468-915
Weight350 grams
₹250.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



சந்திக்கிற ஒவ்வொரு மனிதரிடமும் நுட்பமான கதைகள் இருப்பது அவர்களிடம் மனம்விட்டுப் பேசினால் தெரியும். அவர்கள் பண்பிலிருந்தும், வாழ்க்கை யிலிருந்தும் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய ஏதோ ஒன்று அவசியம் மறைந்திருக்கிறது ஆரோக்கியமான பார்வையோடு உலகத்தைப் பார்த்தால் அத்தனை மனிதர்களுமே சுவாராஸ்யத்திற்குப் பஞ்சமில்லாத வர்கள் என்கிற உண்மை புரியும். வெகுநாட்களாக அப்படிப்பட்ட சந்திப்புகளைக் குறித்து எழுத வேண்டும் என்கிற ஆர்வம் எனக்கு ஏற்பட்டது மங்கையர் மலரில் தொடர் எழுத வேண்டுமென்று கேட்ட போது நான் சந்தித்த சில பெண் பாத்திரங்களை வைத்து எழுதலாம் என முடிவு செய்தேன். முழுக்க முழுக்க இலக்கியத் தரத்தில் இத்தொடர் இருக்க வேண்டாமென்றும், சில ஆங்கிலப் பிரயோகங்கள் அந்த இதழின் வாசகர்களுக்கு வசதியாக இருக்கும் என்றும் சொல்லப்பட்டது. இதை மனத்தில் வைத்து என் வழக்கமான நடையிலிருந்து விலகி அங்கங்கே ஆங்கிலம் கலந்து 22 அத்தியாயங்கள் எழுதினேன். இதில் விடுபட்ட சில ஆபூர்வமானவர்களையும் சேர்த்து 50 அத்தியாயங்களாக பின்னர் விரிவுபடுத்தினேன்.தாய்மையும், மென்மையும் கொண்ட பெண்களை மட்டும் முழுக்க எழுதாமல் சில மேன்மையான ஆண்களையும் குறிப்பிட்டு இந்நூலை எழுதி முடித்தேன்.
விவரம் தெரிந்த நாளிலிருந்து சந்தித்த அதிசய மனிதர் களைப் பற்றி இன்னும் விரிவாக எழுதுகிற அவகாசம் ஒன்று வரும் என்று நினைக்கிறேன்

உங்கள் கருத்துக்களை பகிர :
வெ.இறையன்பு :

சுயமுன்னேற்றம் :

விஜயா பதிப்பகம் :