சஞ்சாரம்

ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன்

Category நாவல்கள்
Publication தேசாந்திரி பதிப்பகம்
Formatpaper back
Pages 360
ISBN978-93-87484-19-2
Weight400 grams
₹340.00 ₹306.00    You Save ₹34
(10% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereதமிழ் சமூகத்தின் அடையாளமாகக் கருதப்படும் நாதஸ்வரக் கலையைப் பற்றியதே சஞ்சாரம் நாவல்.2018 சாகித்திய அகாடமி விருது பெற்ற நாவல்வரலாற்றின் ஊடாக கரிசல் நிலத்தின் வாழ்க்கையை, அதன் விசித்திரங்களை விவரிக்கிறது இந்நாவல், இன்றும் தொடரும் சாதிய ஒடுக்குமுறைகளையும் கிராமியக்கலைகளின் வீழ்ச்சியையும் கைவிடப்பட்ட விவசாயிகளின் துயரத்தையும் ஊடாடிச் செல்கிறது சஞ்சாரம். கரிசல் நிலத்தின் ஆன்மாவை இசையாக உருவாக்கி தமிழ் நாவல் உலகில் புதிய சாதனை படைத்திருக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.

பக்கிரி என்னும் மனிதனின் கதை மூலம் கரிசல் நிலத்தின் நாதஸ்வர இசையை, நாதஸ்வரக் கலைஞர்களை, அவர்களின் வாழ்க்கைத் துயரைப் பேசுகிறது இந்நாவல்.
சிறுவயது முதலே நாதஸ்வரம் கேட்டு வளர்ந்தவன் என்பதால் அந்த இசை குறித்தும், அதன் நினைவுகள் குறித்தும் எழுதவேண்டும் என்ற ஆசை நீண்டகாலமாகவே இருந்து வந்தது. தஞ்சை மண்டல் நாதஸ்வரக் கலைஞர்கள் கொண்டாடப்படுகிற அளவிற்கு. கரிசல் வட்டார நாதஸ்வரக் கலைஞர்கள் கொண்டாடப்படவில்லை. ஒரே விதிவிலக்கு காருகுறிச்சி அருணாச்சலம். அவரது எழுச்சியும் மேதமையும் பலருக்கும் உத்வேகமாக இருந்தது.இந்நாவல் கரிசல் நிலத்தின் ஆன்மாவாக நாதஸ்வர இசையை அடையாளப்படுத்துகிறது. நாவலை எழுதுகிற தருணங்களின் ஆலோசனைகள் சொன்ன கவிஞர் ரவி சுப்ரமணியத்திற்கும், மறைந்த எழுத்தாளர் தேனுகாவிற்கும், கவிஞர் தேவதச்சன், எஸ்.ஏ.பெருமாள் உள்ளிட்ட நண்பர்களுக்கும், என்னையும், என் எழுத்தையும் நேசிக்கும் அன்பு மனைவி சந்திரபிரபா, பிள்ளைகள் ஹரி பிரசாத், ஆகாஷ் மற்றும் இந்த நூலை சிறப்பாக வெளியிடும் தேசாந்திரி பதிப்பகத்திற்கும் தீராத நன்றிகள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
எஸ். ராமகிருஷ்ணன் :

நாவல்கள் :

தேசாந்திரி பதிப்பகம் :