சங்க இலக்கிய ஒப்பீடு - இலக்கியக் கொள்கைகள்
ஆசிரியர்:
டாக்டர் தமிழண்ணல்
விலை ரூ.200
https://marinabooks.com/detailed/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81+-+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=1487-6902-4900-6456
{1487-6902-4900-6456 [{புத்தகம் பற்றி 'சங்க இலக்கிய ஒப்பீடு என்ற பெரும் பனுவல் பேராசிரியர் தமிழண்ண லின் புலமைக்கு ஒரு செப்புப் பட்டயம் ஆகும். இவ்விலக்கியத்தின் பொருள் முறைகளையும் படைப்பு நெறிகளையும் வடமொழி கிரேக்கம் இலத்தின் கோட்பாடுகளோடு ஒப்பிட்டுப் பொது நெறிகளையும் தமிழின் தனிநெறிகளையும் விதந்து காட்டுகின்றார், தமிழண்ணல். இத்தகைய ஒப்புறவுகளால் தொல்காப்பியம் சங்கவிலக்கியங்களின் உயர்வுகளும் புதுமையும் புலருகின்றன என்பது இவர்தம்கருத்து. இக்கருத்தினை மையமாகக் கொண்டு, ஆழ்ந் தகன்ற சிந்தனைகளையும் ஐயத்தெளிவுகளையும் குறைநிறைகளையும் எதிர் காலத்திட்டங்களையும் சங்க இலக்கிய ஒப்பீடு என்ற நூல் விரித்தியம்புகின்றது.
<br/>"இலக்கியம் ஏனைய பயிரினம் உயிரினங்களைப் போல நிலத்தின் விளைவுமாகும் என்பதைச் சங்க விலக்கியம் மெய்ப்பிக்கின்றது. சங்க கால நிலப்பாங்கும் பருவத் தன்மையும் இயற்கை யழகும் இன்றும் அதில் மணக்கின்றன. எந்த அளவு அது சமுதாய வெளிப்பாடாய் இருக்கிறதோ அந்த அளவு நிலத்தின் வெளிப்பாடாகவும் இலங்குகின்றது. அதனால் தான் சங்கவிலக்கியம் தமிழ் மண்ணில் நன்கு வேர் பிடித்து வளர்ச்சி பெற்றது. பின்னைய இலக்கியங்கள் எத்தனை மாறுதல்களை ஏற்றிருப்பினும் அந்த வேரிலிருந்தே அவை வளர்ந்தன என்பதனை, அவை நம்மை உணர வைக்கின்றன" என இவ்வாறு ஒப்பீட்டு முறையில் நம் சங்கவிலக்கிய ஒப்பீட்டினைக் கூறுவர் தமிழண்ணலார். 'செந்தமிழியற்கை சிவணிய நிலம்' என்ற தொல்காப்பியமும், 'செந்தமிழ் நாடெனும் போதினிலே' எனப் பாரதியமும் கூறுவன தமிழண்ணலின் கருத்தினை மேலும் வலுப்படுத்துகின்றன.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866