சங்கப் பெண் புலவர்களின் பாடல்களில் பெண்

ஆசிரியர்: ஏ. இராஜலட்சுமி

Category மகளிர் சிறப்பு
Publication முரண்களரி படைப்பகம்
FormatPaperback
Pages 96
Weight150 grams
₹60.00       Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



உலகின் சரிபாதியாக விளங்கும் பெண் இனம் நடைமுறையில் அப்படியான எந்த அங்கீகாரமும் அற்றே உழல்கிறது. தொடர்ந்து பெண்களை இரண்டாம் பாலினமாக நடாத்தும் சமூக நடைமுறையில் பெண்களின் இடம் தடமற்றுப் போவதே இயல்பானதாகக் கற்பிக்கப்படுகிறது. கல்வி, பணி, பொருளாதாரம் என்று சமனை நோக்கிய பெண்ணின் அனைத்து முயற்சிகளும் பெண் என்பதால் வெட்டி வீசப்படுகின்றன. இங்கு வீடு, சமூகக் கற்பிதங்களைக் கற்பிக்கும் பெரும் பல்கலைக் கழகமாக விளங்குகிறது. ஆணாதிக்கச் சிந்தனை தொடர்ந்து வகிக்கும் இப்படியான வலைகளிலிருந்து மீள முடியாமல் இவற்றையே தூக்கிச் சுமக்கும் பெண்களும் ஏராளம். மூடச் சிந்தனைகள் சிலவற்றைத் தொலைக்கவே பல நூற்றாண்டு தேவைப் பட்டுள்ளது. தொலைத்த, பெண்ணிற்கு எதிராக இப்படி யான சிந்தனைகளை மீண்டும் மீட்டெடுக்கும் ஊடகங்கள், நடைபெற்றுள்ள சமூகப் போராட்டங்களை, நிகழ்த்திய சிந்தனையாளர்களைக் கிஞ்சித்தும் மனசாட்சியற்று மீண்டும் கொன்று புதைக்கும் பணியைச் செம்மையாகச் செய்கின்றன. அறிவோடு பெண்ணைத் தொடர்புபடுத்திப் பார்க்கும் பார்வையை ஏற்படுத்த வேண்டிய நெருக்கடியான சூழலில் இருக்கிறோம். நுகர்பொருள் என்பதான சிந்தனையைக் கடந்துவர வேண்டியுள்ளது இச்சமூகம். சமூக, அரசியல், பொருளாதார நிலைகளில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ள இன்றைய காலகட்டத்திலேயே பெண், ஊடகங்கள் உள்ளிட்ட அனைத்துத் தளங்களிலும் தனித்த கீழான சிந்தனைகளைத் தொடர்ந்து விதைக்கின்றன.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஏ. இராஜலட்சுமி :

மகளிர் சிறப்பு :

முரண்களரி படைப்பகம் :