சகோதர சகோதரிகளே...
ஆசிரியர்:
சுவாமி விவேகானந்தர்
விலை ரூ.200
https://marinabooks.com/detailed/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0+%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87...?id=1007-9521-8898-1303
{1007-9521-8898-1303 [{புத்தகம் பற்றி உலகில் இதுவரை வாழ்ந்த மாமனிதர்கள் எல்லாம் நமக்கு உணர்த்தி நிற்கின்ற ஒன்று உண்டு. நாமும் உன்னத வாழ்க்கை வாழலாம் என்பதே அது. நாம் பின்பற்றி நடப்பதற்காக, காலமெனும் பெரும் மணற்பரப்பில் தங்கள் வாழ்க்கை மற்றும் உபதேசங்கள் என்னும் காலடித் தடங்களை அவர்கள் விட்டுச் சென்றனர். அப்படிச் சமீப காலத்தில் அழியாத தடங்களை விட்டுச் சென்றவர் சுவாமி விவேகானந்தர்.
<br/>அவர் உலக அரங்கில் இருந்தது என்னவோ பத்து ஆண்டுகளுக்கும் குறைவான காலம்தான். ஆனால் அதற்குள் அவர் சாதித்ததுதான் எத்தனையெத்தனை! தத்துவம், மதம், மன இயல், சமூக இயல், விஞ்ஞானம், வரலாறு, புவியியல், வான இயல், கலை, இசை என்று அவர் பேசாத துறை எதுவுமே இல்லை எனலாம். பேசியது மட்டுமல்ல, அவை ஒவ்வொன்றிலும் ஒரு புதிய ஒளியைப் பாய்ச்சியுள்ளார் அவர்.சுவாமி விவேகானந்தர் பேசிய மற்றும் எழுதிய இலக்கியத் தொகுதி 'ஞான தீபம்' என்ற பெயரில் 11 சுடர்களாக வெளிவந்துள்ளன. அந்தச் சுடர்களுக்கு ஓர் அறிமுகம் போல் அமைவது இந்த நூல்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866