க.அயோத்திதாசர் ஆய்வுகள்

ஆசிரியர்: ராஜ் கௌதமன்

Category கட்டுரைகள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaperback
Pages 192
ISBN978-81-87477-86-0
Weight250 grams
₹240.00 ₹228.00    You Save ₹12
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereக. அயோத்திதாசர் (1845 - 1914) என்னும் பௌத்தப் பெரியாரின் ஆய்வுகளும் தீர்வுகளும் ஆசியாவுக்கு மட்டுமின்றி முழு உலகிற்கே ஒளியாக உதித்த கெளதம் புத்தரின் அகிம்சையிலிருந்து உருப்பெற்றன. இதில் வன்முறையோ, ஆதிக்கமோ, புரோகிதமோ, சாதியோ, சமயமோ, கடவுளோ கிடையாது. மாறாகக் கருணையும் ஒழுக்கமும் சமத்துவமும் வினைத் தொடர்ச்சியும் உண்டு. ஒவ்வொருவனும் தன்னைப் பகுத்தறிவு மற்றும் அறம் சார்ந்த முறையில் உயர்த்திக்கொள்ளும் வழிமுறைகள் உள்ளன. சக மனிதனைச் சமமாக மதிக்கும் நேர்மை உண்டு. சாதி, மதம், நிறம், பால், இனம், நாடு, பொருள் ஆகிய அளவீடுகளின்றி சகமனிதரை அவர்களது செயல்களாலும் மொழியாலும் சிந்தனையாலும் பண்பாலும் , ஒழுக்கத்தாலும் மதிப்பிடுகின்ற அணுகுமுறை உண்டு. இந்திய - தமிழகச் சூழலில். சாதி மத பேதமற்ற யாருக்கும் இது சாத்தியமே என்பதை அயோத்திதாசரின் வாழ்க்கைப் பணிகளிலிருந்து அறியலாம். இங்கே மதங்களை மட்டுமல்ல, சாதிகளையும் விட்டால்தான் ஒருவனால் பண்பும் ஒழுக்கமும் உள்ள மாந்தனாக வாழ முடியும் என்பதை புத்தபிரான் வழிநின்று நிறுவியுள்ளார் தாசர்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ராஜ் கௌதமன் :

கட்டுரைகள் :

காலச்சுவடு பதிப்பகம் :