கோயில் நுழைவுப் போராட்டங்களில் திராவிடர் இயக்கங்களின் பங்களிப்பு

ஆசிரியர்: வாலாசா வல்லவன்

Category கம்யூனிசம்
Publication தமிழ்க் குடிஅரசுப் பதிப்பகம்
FormatPaperback
Pages 264
Weight300 grams
₹120.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



இந்நூலாசிரியர் வாலாசா வல்லவன் (செ.சேகர்) வேலூர் மாவட்டம், வாலாசா வட்டம், வை.ச.மோட்டூர் செயராமன் முனியம்மாள் இணையரின் மகனாக 21.05.1959 இல் பிறந்தார். தொடக்கக் கல்வியை வை.ச.மோட்டூரிலும் உயர்நிலைக் கல்வியை வாலாசாப்பேட்டை உயர்நிலைப் பள்ளியிலும், கல்லூரிக் கல்வியை மேல் விசாரம் அப்துல் அக்கீம் கல்லூரியிலும் (இளம் அறிவியல் வேதியியல்) பயின்றார், பெரியார் சிந்தனைகள் மூன்று தொகுதிகளையும் முழுமையாகப் படித்த பின்னர் 1983 முதல் பெரியார் கொள்கையாளராக மாறினார். தோழர் வே. ஆனைமுத்து அவர்களுடன் ஏற்பட்ட தொடர்பின் காரணம் மாக; 1989 முதல் மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் முழுநேர ஊழியராகப் பணியாற்றினார். தற்போது சென்னை மாவட்டச் செயலாளராகப் பணியாற்றி வருகிறார். திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார் - என்ற சிறப்பான ஆய்வு நூல் ஒன்றை எழுதியுள்ளார். இந்த ஆய்வு நூல் பாரதியாரின் மறுபக்கத்தை விளக்கும் ஓர் ஒப்பற்ற நூலாகும். கவிஞர் கருணானந்தம் எழுதியுள்ள 'பெரியார் வாழ்க்கை வரலாறு' நூலை மறுபதிப்பு செய்துள்ளார். மேலும் திராவிடர் இயக்கம் தொடர்பான பல நூல்களை மறுபதிப்புச் செய்துள்ளார். ' திராவிடர் இயக்கங்கள் தமிழ்த் தேசியத்துக்கு தடைக்கல்லா?, படிக்கல்லா? என்றத் தலைப்பில் சிந்தனையாளன் ஏட்டில் தொடர் கட்டுரை எழுதி வருகிறார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
வாலாசா வல்லவன் :

கம்யூனிசம் :

தமிழ்க் குடிஅரசுப் பதிப்பகம் :