கோநகர் கொற்கை

ஆசிரியர்: அ இராகவன்

Category வரலாறு
FormatPaperback
Pages 160
Weight200 grams
₹150.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
இன்று தமிழகத்தில் பல்வேறு இனத்தவர்கள், "நாங்கள் பாண்டியர் இனத்தவர், பாண்டியர் குடும்பத்தவர்; பாண்டியரின் நேர்வழியில் வந்தவர்'' என்று உரிமை கொண்டாட முன்வந்துள்ளனர். பாண்டியர் ஆட்சி மறைந்து 500 ஆண்டுகளுக்கு அப்பால் - நாடு உரிமை பெற்றபின் இப்பொழுதாவது பலர் தைரியமாக பாண்டியர்களின் குடியில் வந்தவர்கள் என்று உரிமையுடன் தலை நிமிர்ந்து பேச முன் வருவது கண்டு களிபேருவகை அடைகின்றேன். ஆனால், நம்மால், “யார் பாண்டியர் இனம்? யார் பாண்டியரின் நேர்வழியில் வந்தவர்கள்?” என்று தீர்மானிக்க முடியவில்லை. உரிமை கொண்டாடுகிறவர்கள் எவரிடமும் எழுத்து மூலமான ஆதாரமோ அல்லது கொடி வழிப்பட்டியலோ அல்லது பாண்டியர்களின் அரசு கட்டில், செங்கோல், முடி, கொடி, முத்திரை போன்ற அடையாளங்களோ இல்லை. எனவே நம்மால், யார் பாண்டியர்களின் வழிவந்தவர்கள்? என்று அறுதியிட்டு உறுதிகூற முடியவில்லை .
எனவே, இன்று, பாண்டியர் ஆட்சி மறைந்து போனதற்கு யார் உண்மையாக வருந்துகிறார்களோ? பாண்டியர் கோ நகர்-கொற்கை அழிந்து கிடக்கும் அவல நிலைகண்டு அழுது கண்ணீர் வடித்து, அப்பட்டினம் புத்துருப்பெற, புதுவாழ்வு பெற யார் முன் வந்து இப்பெரும் பணியை நிறைவேற்றுகிறார்களோ? அவர்களே பாண்டியர் இனம், அவர்களே பாண்டியப் பேரரசர்களின் வழிவந்தவர்கள் என மதிக்கப்பெறுவர்.
கொற்கைக் கோநகரின் மறுமலர்ச்சிக்கு ஆற்றும் அரிய பணி, பழம் பாண்டியப் பேரரசர்களின் ஆன்மாவிற்குக் களிப்பூட்டும் தெய்வப்பணி. தமிழ் அன்னையின் உள்ளத்திற்கு உவகை ஊட்டும் நாட்டுத் திருப்பணி நற்றொண்டு. இப்பெரும் பணியாளர்களுக்குத் தமிழன்னையின் வாழ்த்துக் கிடைக்கும். அதனால் தமிழ் மக்களின் வாழ்வு வளரும் வளம் பெருகும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
அ இராகவன் :

வரலாறு :

ஸ்ரீ செண்பகா பதிப்பகம் :