கோசார பலன்கள் நிர்ணயம்

ஆசிரியர்: மு மாதேஸ்வரன்

Category ஜோதிடம்
Publication விஜயா பதிப்பகம்
FormatPaperback
Pages 136
ISBN978-81-89796-85-2
Weight150 grams
₹90.00 ₹85.50    You Save ₹4
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



அன்புள்ளம் கொண்ட வாசகப் பெருமக்களை “கோசார பலன்கள் நிர்ணயம்” என்ற இச்சிறு நூலின் மூலம் மறுபடியும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன். கோசார பலன்களை நிர்ணயம் செய்வதில் பல்வேறு வழி முறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றது. சிலர் அவரவர்களுக்கு மனதில் என்ன தோன்றுகின்றதோ அதையெல்லாம் பலன் கூறிவிடுகின்றார்கள். முறையாக கோசார பலன் நிர்ணயம் செய்யாமல் மனம் போனபடி சொல்லி விடுவதால் சொல்பவருக்கு எதுவும் பிரச்சனை இல்லை. ஆனால் கேட்பவர்கள் குழம்பி விடுகின்றார்கள்.
சம்பந்தமேயில்லாத வகையில்கூட கோசார பலன்களை கூறுவதுடன் முக்கியமாக பத்திரிகைகளில் எழுதப்படும் பல கோசார ராசி பலன்கள் வெறும் ஹேஸ்யமாகவே அமைந்து விடுகின்றது. ஒரு வாரம் சரியாக வந்தால் மறுவாரம் சம்பந்தமே இல்லாமல் இருக்கும். இதாவது பரவாயில்லை . இதைப் படிப்பவர்களில் பெரும்பாலோர் ஏதோ படித்தோம்; பட்டால் படட்டும், இல்லாவிட்டால் போகட்டும், நஷ்டம் எதுவும் இல்லை யென்று விட்டுவிடுவார்கள். ஆனால் ஜாதகப் பலன்களைக் காணும்போது கோசார ரீதியாக கிரக நிலைகளை கவனத்தில் கொண்டு, அதை அனுசரித்தே பலன்கள் கூறவேண்டும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
மு மாதேஸ்வரன் :

ஜோதிடம் :

விஜயா பதிப்பகம் :