கொங்கு நாடு

ஆசிரியர்: புலவர் குழந்தை

Category வரலாறு
Format Paperback
Pages 504
ISBN978-93-87573-40-6
Weight550 grams
₹400.00 ₹380.00    You Save ₹20
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866புலவர் குழந்தை அவர்தம் அரிய படைப்பான இந்தக் “கொங்கு நாடு” என்னும் நூலையும் வெளியிடுவதற்கு நாங்கள் பெருமகிழ்வுகொள்கின்றோம். இந்த நூலில் பொதுப் பகுதி, தமிழக வரலாற்றுப்பகுதி, கொங்கு நாட்டு வரலாற்றுப்பகுதி என்னும் மூன்று பெரும் பகுதிகளையும் கொண்டு விளங்குகின்றது. ஏறக்குறைய நாற்பது வரலாற்று நூல்களின் துணைக்கொண்டு பேராய்வு செய்து இந்தக் “கொங்குநாடு" என்னும் நூலை உருவாக்கியுள்ளார் புலவர் குழந்தை.
மேலும், கல்வெட்டாய்வும்செப்பேட்டு ஆய்வும் கள ஆய்வும் செய்து, கொங்கு நாட்டு வரலாற்றை நிறுவியுள்ளார் புலவர் குழந்தை. “கொங்கு நாடு” என்னும் இந்த நூல் வரலாறு அனைத்தையும் ஒருங்கே அறிந்து கொள்ளப் பெருவாய்ப்பாக அமையும். கொங்கு நாட்டுப் பகுதியில் தொன்றுதொட்டே தொழிற் சாலைகள் மிகுதியாக இயங்கிவந்தன என்பதனைப் புலவர் குழந்தை பல சான்றுகளுடன் இந்நூலில் நிறுவியுள்ளார்.
தமிழரின் தொன்மைச் சிறப்பு, பண்பாட்டுச் சிறப்பு, நாகரிக வரலாற்றுச் சிறப்பு, கல்வி மேம்பாட்டுச் சிறப்பு, இலக்கிய இலக்கணச் சிறப்பு, மொழிச் சிறப்பு, அரசியல் சிறப்பு ஆகிய இவை அனைத்தையும் ஒவ்வொரு தமிழனும் அறிந்துகொள்ளுதல் வேண்டும். அவ்வாறு அறிந்துகொள்ள இந்தக் “கொங்கு நாடு" என்னும் வரலாற்று நூல், பெரிதும் உறுதுணையாக இருக்கும் என்பதில் எள்ளவும் அய்யமில்லை.

உங்கள் கருத்துக்களை பகிர :
புலவர் குழந்தை :

வரலாறு :

கௌரா பதிப்பக குழுமம் :