கைவைத்தியக் கையேடு

ஆசிரியர்: புலியூர் கேசிகன்

Category சித்தர்கள், சித்த மருத்துவம்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 96
Weight100 grams
₹50.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே சித்த மருத்துவம் தோன்றியுள்ளது எனலாம். ஆரம்பத்தில் ஏற்பட்ட சிறுசிறு உடல் பாதிப்புகளுக்கு எளிதில் ஆங்காங்கே கிடைக்கின்ற இலைகளையும் தழைகளையும், மரப்பட்டைகளையும், காய்களையும், கனிகளையுமே மனிதன் பயன்படுத்தினான். எதனைப் பயன்படுத்தும் போது அவனுடைய பாதிப்பு நீங்கியதோ அதனை அந்நோய்க்கான மருந்து என்றான். அப்படித்தான் அநுபவ வைத்தியம் என்கிற கை வைத்தியம் தோன்றியது. இயற்கையாகக் கிடைக்கும் மருந்துகள் என்பதனால் அவற்றை மூலிகைகள் என்றும், அவற்றைப் பயன்படுத்தும் முறையைச் சித்த வைத்தியம் என்றும் விளம்பினார்.
பட்டறிவின் மூலம் பயன்படுத்திய மருந்துகள் பின்னர் வைத்திய முறையாக மாற்றமடைந்தது. பெரிய நவீன கருவிகள் ஏதும் இல்லாத காலத்தில், அவை கண்டுபிடிக்கப்படாத காலத்தில் கைகளைப் பயன்படுத்தி மருத்துவங்களைச் செய்தனர். இதுவே கைவைத்தியம் எனப்பட்டது. பல்வேறு இலக்கிய நூல்களையும், இலக்கிய நூல்களுக்கு உரைகளையும் எழுதி உரையாசிரியர் என அழைக்கப்படும் புலியூர்க் கேசிகன் அவர்கள் சித்த மருத்துவத் துறையில் எழுதிய நூலே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அநுபவ வைத்தியம் என்னும் சிறந்த நூல்.

உங்கள் கருத்துக்களை பகிர :
புலியூர் கேசிகன் :

சித்தர்கள், சித்த மருத்துவம் :

கௌரா பதிப்பக குழுமம் :