கைம்மண் அளவு

ஆசிரியர்: நாஞ்சில் நாடன்

Category கட்டுரைகள்
Publication சூரியன் பதிப்பகம்
FormatPaperback
Pages 288
First EditionMar 2016
ISBN978-93-85118-56-2
Weight350 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
₹200.00 $8.75    You Save ₹10
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866* கடவுள் என்பவர் யாருடைய கடவுள்? தங்கத்தேர் இழுப்பவர், மணி மண்டபங்கள் பணி செய்து கொடுப்பவர், தங்க அங்கியும் வைரமணி முடியும் அணிவிப்பவரின் கடவுளா? அல்லது நான்கு மணி நேரம் வரிசையில் நிற்பவரின் கடவுளா? அன்னதானம் வாங்கிப் பசியாறு பவரின் கடவுளா?* மிகவும் மலிவான கால் குப்பி மதுவின் விலை 98 ரூபாய் என்றால் அதில் நாற்பத்தைந்து ரூபாய் அரசாங்கத்துக்கு, முப்பது ரூபாய் தயாரிப்பாளன் ஆதாயம், மிச்சம் உற்பத்திச் செலவு. யாரிதில் இடைத்தரகர் கனவான்களே? தரகர்களால்amp;nbsp; தரகர்களுக்காக தரகர்களே நடத்தும் தரகாட்சி! அதன் மாற்றுப் பெயர்தான் மக்களாட்சி என்பது.* பண்டைய கோயில்களில் சிற்பங்களாக, ஓவியங்களாக வடித்தோ, தீட்டியோ வைத்திருப்பார்கள்... இரு பாம்புகள், வட்ட வடிவமாக ஒன்றன் வாலை இரண்டாவது பாம்பு கவ்விக்கொண்டிருக்கும். இரண்டாவதன் வாலை முதலாவது கவ்விக்கொண்டிருக்கும். அந்தச் சிற்பத்தின் பொருள் விளங்கியதில்லை எனக்கு. இப்போது பொருளாகிறது, ஒருவன் மற்றவனைத் தின்ன முயல்வதன் குறியீடு அது என!* சிலருக்கு இரண்டு மணி நேரத்தில் கிடைக்கும் நீதி. செல்வமும் செல்வாக்கும் அரசியல் பின்னணியும் இருந்தால்! அதிகாரத்தின் துணை இருந்தால் குற்றவாளிகளே தமக்குச் சாதகமான தீர்ப்பு எழுதி, நீதி தேவர்களின் கையெழுத்துக்கு அனுப்பிவிடலாம்தானே!- இப்படி இந்தத் தொகுப்பில் நாஞ்சில் நாடன் தமிழ்ச் சமூகத்துக்கு எழுப்பும் கேள்விகள் வீரியமானவை! ‘குங்குமம்’ இதழில் தொடராக வெளிவந்து, இப்போது நூல் வடிவம் பெற்றிருக்கிறது..

உங்கள் கருத்துக்களை பகிர :
நாஞ்சில் நாடன் :

கட்டுரைகள் :

சூரியன் பதிப்பகம் :