கைக்கு எட்டும் தூரத்தில் அழகு

ஆசிரியர்: ராஜம் முரளி

Category மகளிர் சிறப்பு
Publication விகடன் பிரசுரம்
FormatPaperback
Pages N/A
Weight200 grams
₹135.00 ₹128.25    You Save ₹6
(5% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



``நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க! என்று சொன்னால் சந்தோஷப்படாத மனிதர் உண்டா? தாழம்பூ நிறமும், பிறை நெற்றியும், ஜொலிக்கும் கண்களும், கூர்த்த நாசியும், முத்துப் பற்களும் முல்லைச் சிரிப்பும்தான் அழகு என்பதில்லை. `சாதாரணமாக இருந்தாலும், கூந்தல் முதல் பாதம் வரை நம்முடைய உறுப்புகளை ஒழுங்காகப் பராமரித்தாலே அழகாகத் திகழலாம் என்கிறார், இயற்கை அழகுக் கலை நிபுணர் ராஜம் முரளி.ஏற்கெனவே, `அழகைப் பராமரித்தல் குறித்து இவர் எழுதி, நமது பிரசுரத்தில் வெளிவந்துள்ள நூல்கள், வாசகர்களிடையே, முக்கியமாக பெண்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றவை. இப்போதும், பல நூறு டிப்ஸ்களை அள்ளி வழங்கி இருக்கிறார்.நம் அழகைப் பேணிப் பராமரிக்க உதவும் பொருட்கள் எல்லாம் எங்கேயோ எட்டாத தூரத்தில் இல்லை... எல்லாமே நம் வீட்டில், நாம் அடிக்கடி புழங்கும் பொருட்கள்தான். பால், தயிர், வெந்தயம், எண்ணெய், மருதாணி, கறிவேப்பிலை, மிளகு என்று நம் அடுக்களையில் இருக்கும் பொருட்களை வைத்தே எளிமையான அழகு சிகிச்சை செய்துகொள்ளக் கற்றுத் தருகிறார். வெட்டிவேர், ரோஜா இதழ்கள், புங்கங்கொட்டை போன்ற மற்ற சில பொருட்கள் நாட்டுமருந்துக் கடையில் கிடைப்பவையே! தயாரிக்கும் முறையையும் உபயோகிக்கும் விதத்தையும் அதில் கவனிக்கவேண்டிய விஷயங்களையும் எளிமையாக வழங்கியிருக்கிறார்.இந்தப் புத்தகத்தின் இன்னொரு சிறப்பம்சம், பெண்களுக்குப் பொதுவாக ஏற்படும் அழகு மற்றும் ஆரோக்கியம் குறித்த கேள்விகளுக்கு விரிவாக விளக்கங்களைத் தந்திருக்கிறார். அவை, எல்லோருக்குமே பயன் தரும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.இனியும் தாமதிக்காமல், உங்கள் கைக்கு எட்டும் தூரத்திலேயே காத்திருக்கும் அழகை, உங்களுடையதாக்கிக் கொள்ளுங்கள். அதற்கு இந்தப் புத்தகம் உதவும் என்று நம்புகிறேன். அழகுடன் ஆரோக்கியமாகவும் வாழ வாழ்த்துகள்!

வெடிப்பு நீங்க50 கிராம் வெள்ளை எள்ளுடன், 50 கிராம், 'கசகசாவை மிக்ஸியிலிட்டு நைஸாகத் தூள் செய்யவும். அந்தப் பொடியுடன் 200 மி.லி, நல்லெண்ணெய் கலந்து, கண்ணாடிப் பாட்டிலில் பத்திரப்படுத்தவும். காலையும், மாலையும் தடவி வர, பித்த வெடிப்பு மறைந்துவிடும், நகங்கள் உடைந்து, வெடிப்பும் கீறலுமாக இருந்தால், 'அரை கப் காய்ச்சி, ஆறிய பாலில் ஒரு டேபிள்ஸ்பூன் எலுமிச்சைச் சாறு விட்டுக் குழைத்து, காட்டன் பட்ஸில் தோய்த்து, கால் விரல்களின் மீது பூசி வரவும். ரோஜா இதழ் போன்ற மிருதுவான விரல் களுக்கு நான் , கேரன்டி கால்களின் ஷேப் அழகாக இருந்தால்தான், நடையும், தோற்றமும் நளினமாக இருக்கும். டீன் ஏஜ் பெண்கள், 'வீட்டில் சும்மா இருக்கும்போது செய்து 'பழக வேண்டும். அதாவது வழுக்காத தரை மீது கால் விரல்களை மட்டுமே ஊன்றி, கெண்டைக்கால் சதையை லேசாக 'ஸ்ட்ரெச்' செய்தபடி நடந்தால், ஸ்லிம்மான கால்கள் அமையும், இஸ்லாமியர்கள் தொழுகையில் அமர்வதுபோல, முழந்தாளிட்டு அமர்ந்து, தலையால் தரையைத் தொடும் ஆசனத்துக்கு 'வஜ்ராசனம்' என்று பெயர். இதை முறைப்படி செய்து வந்தாலும் அழகிய கால்களைப் பெறலாம், ' இதைப் போன்ற ஏராளமான முக்கிய அழகுக் குறிப்புகள் உள்ளே பொதிந்து கிடக்கின்றன.


உங்கள் கருத்துக்களை பகிர :
ராஜம் முரளி :

மகளிர் சிறப்பு :

விகடன் பிரசுரம் :