கேசம்

ஆசிரியர்: நரன்

Category சிறுகதைகள்
Publication சால்ட் பதிப்பகம்
Formatpaperback
Pages 126
First EditionOct 2017
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 16 x (D) 1 cms
$5.5       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

மானேந்தி கணபதி ஸ்தபதியின் மகன். கருத்த திராட்சை கொத்துப் போன்று அவனின் வம்சாவழி முழுக்க கருங்கல் நிறம். இவன் மட்டும்தான் கொத்திலிருந்து தப்பி அவனின் அம்மையைப்போல் நிறம் வெளிறி பிறந்தவன். மெலிந்த வலிமையான தேகம், தோளில் படரும் சுருள் முடிகள். தகப்பனிடம் பாடம். அவனும் சிலை எடுப்பான். ஓரிடமாய் இருப்பு இல்லாமல் ஊரூராய் சுற்றிக் கொண்டேயிருப்பான்.
அதிகாலையில் கிளம்பி, சிவ சைலம், கிருஷ்ணாபாம் ஆல் வார்க்குறிச்சி, மலை மேல் நம் பி, என திருக்கோவில்களாய் திரிவான். கிருஷ்ணாபுரத்து கல் வடிப்புகளின் மேல் தனிப் பிரியம் அவனுக்கு. கரம் கூப்பி தொழ மாட்டான். கன்னத்தில் போட்டுக்கொள்ள மாட்டான். வெளி பிரகாரத்தில், மண்டபத்தில், கருவறையிலென, கல் ரூபங்களை உற்றுப் பார்ப்பான். அது அவன் அப்பனிடமிருந்த வந்த கிறுக்கு. அவரும் இப்படித்தான் ஊரூராய் போய் வடித்தெடுக்கப்பட்ட கோவில் சிலைகளை, காலையிலிருந்து மாலை வரை வரிசைக்கிரகமாய் ஆழ்ந்து பார்த்துவிட்டுதான் நகர்வார்.

உங்கள் கருத்துக்களை பகிர :