கூத்த நூல்

ஆசிரியர்: ச.து.சு.யோகியார்

Category சங்க இலக்கியம்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 604
ISBN978-93-88625-28-9
Weight700 grams
₹600.00 ₹510.00    You Save ₹90
(15% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866முத்தமிழ் பகுப்பின் முதன்மொழியாவது தமிழ்மொழி. இயல் இசை நாடகம் என்பது வாழ்வின் இயல்பை விளக்கும் முறையாக வெளிப்படுத்திக் காட்டும் முயற்சி என்ப. இப்பகுப்பில் முதலில் தோன்றியது நாடகம் என்பர். குழந்தை பிறந்ததும் மொழி தோன்றும் முன்பே கைகால்களை அசைக்கின்ற சைகை என்னும் நாடகம் தொடங்கிவிடுகிறது. பின்பே இசையும் இயலும் தோன்றியதாகக் கொள்வர் எனினும் இயல் நூல்கள் கிடைத்த அளவுக்கு இசைநூல்களோ, இசை நூல்கள் கிடைத்த அளவுக்கு நாட்டிய நூல்களோ கிடைத்தில. அவை ஆழிப்பேரலைகளால் அழிவுண்டன போலும். கிடைத்திருக்கும் நாடக நூல்களுள் பழைமையானதாகக் கருதப்படும் 'கூத்த நூல்' என்னும் அரிய நூல் இப்பொழுது கிடைத்துள்ளது. ஞானக் கவிஞர் ச.து.சு.யோகியார் அவர்களால் வெளிப்படுத்தப் பெற்ற அரிய நூல் இரு தொகுதிகளாக வெளிவந்துள்ளன. முதல் தொகுதி 1968 - ம், இரண்டாம் தொகுதி அவர் மறைவுக்குப் பின் 1987 லும் வெளிவந்துள்ளன. முதல் தொகுதிக்கு யோகியாருடைய உரையுள்ளது. இரண்டாம் தொகுதிக்கு அப்பேறுகிட்டவில்லை. அரிய வகை நூல் அனைவர்க்கும் பயன்படும் என்னும் கருத்தில் அவ்வாறே இப்பொழுது வெளிவந்துள்ளது. இருதொகுதிகளும் இணைக்கப்பட்டு ஒரே தொகுப்பாக இப்பொழுது வெளிவந்துள்ளது. பரத நாட்டிய நூலுக்கு முன்பு எழுதப்பட்டதாகக் கருதப்படும் இந்த நூலை சாத்தனார் என்பவர் எழுதியுள்ளார். அருட் கவிஞர் ச.து.சு.யோகியார் அந்நூல் சூத்திரங்களை வழங்கி முதல் தொகுதிக்கு எளிய தெளிவுரையும் வரைந்துள்ளார். இரண்டாம் தொகுதி உரையின்றி மூலம் மட்டும் இணைக்கப்பட்டுள்ளது செந்தமிழறிஞர் மே.வீ.வேணுகோபால் பிள்ளை இரு தொகுதிகளையும் செம்மையாகப் பதிப்பித்துள்ளார். நூலின் அருமை கருதி அந்நூல் இப்பொழுது எளிதில் கிடைக்கும் வகையில் எமது பதிப்பகத்தின் வழியே வெளிவந்துள்ளது.

உங்கள் கருத்துக்களை பகிர :
ச.து.சு.யோகியார் :

சங்க இலக்கியம் :

கௌரா பதிப்பக குழுமம் :