கூண்டு : இலங்கைப் போரும் விடுதலைப் புலிகளின் இறுதி நாட்களும்

ஆசிரியர்: கார்டன் வைஸ்

Category வரலாறு
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaperback
Pages 310
First EditionDec 2011
3rd EditionNov 2012
ISBN978-93-80240-94-7
Weight400 grams
Dimensions (H) 24 x (W) 16 x (D) 2 cms
₹250.00 ₹225.00    You Save ₹25
(10% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here2009ஆம் ஆண்டின் முதல் சில மாதங்களில், விடுதலைப் புலிகளைச் சுற்றிவளைத்த இலங்கை ராணுவத்தின் தாக்குதலில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் கொல்லப்பட்டனர். இறுதியில் தங்கள் நோக்கமான தனி ஈழத்தை அடைய எதையும் செய்யத் தயங்காதவர்கள் என்று பெயரெடுத்திருந்த விடுதலைப் புலிகள் அமைப்பும் அழிக்கப்பட்டது. அவ்வாறாக 30 ஆண்டுகளாக நடைபெற்று வந்த மோதல் முடிவுக்கு வந்தது.மோதலின் இறுதிக்கட்டங்களில், விடுதலைப் புலிகளுடன் 330,000 தமிழ் பொதுமக்களும் இலங்கைக் கடற்கரையின் வடகிழக்கில் ஒரு சிறிய பகுதிக்குள் சிக்கிக்கொண்டனர். இலங்கை ராணுவம் பல பகுதிகளிலிருந்தும் விடுதலைப்புலிகளைத் துரத்தி அச்சிறிய பகுதிக்குள் தள்ளி, அங்கே குண்டுமாரி பொழிந்தது என்றால், வாழ்வா சாவா என்ற கட்டம் என்பதை உணர்ந்து புலிகளும் அக்குறுகிய பகுதியி லிருந்து தீவிரமாகத் திருப்பித் தாக்க, அம்மோதல்கள் உலகின் கவனத்தையே ஈர்த்தன. குண்டுத் தாக்குதலில் மட்டுமல்ல கொதிக் கும் வெயிலில் வதங்கியும் குழந்தைகள் பல மரித்தன.

உங்கள் கருத்துக்களை பகிர :