கூட்ஸ் வண்டியின் கடைசிப் பெட்டி

ஆசிரியர்: அஜயன் பாலா

Category சிறுகதைகள்
Publication நாதன் பதிப்பகம்
Pages 160
First EditionJan 2019
0th EditionJan 2001
₹150.00 $6.5    You Save ₹7
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866வாழும் கதைகள் இவை. அனுபவத் துளைப்பிலிருந்துபொங்கும் மனச்சுனைகள். இவற்றிலிருந்து பெருகும் உதிரமும் உற்ற நிறங்களும் அடிச்சுவடுகளாக, இவர் நடைவெளியெங்கும் பதிகின்றன. சற்று உயரத்திலிருந்து பார்க்கும்போதே நடந்த இடங்களிலிருந்தெல்லாம் ஓவியங்கள் மேலெழுந்து வருகின்றன. சற்றும் ஒப்பனையற்ற, எதையும் வலிந்தேற்கும் துருத்தலற்ற, மனப்பூர்வத்தில் சுடர்விடுபவை. அஜயன் பாலாவின் கதைகள் மீதில் எனக்கொரு இலக்கியக் கிரக்கம் உண்டு, அவற்றை நான் ரகசியமாக உச்சி முகர்ந்து சிலாகித்திருக்கிறேன் என்பதை வெளிப்படுத்திக் கொள்கிறேன். யூமா வாசுகி அஜயன் பாலா சிறுகதைகள்,நாதன் பதிப்பகம் முன்னுரையிலிருந்துதேர்ந்த கதை சொல்லிக்குரிய லாவகமான மொழியும் காட்சிகளை நுட்பத்துடன் விரிக்கும் பாங்கும் அஜயன் பாலாவை வசீகரமானதொரு கதை சொல்லியாக்கியிருக்கின்றன. புனைவு தரும் சவால்களை அவர் அதற்கான தளத்திலிருந்து எதிர்கொண்டு வெற்றிகண்டிருக்கிறார் என்பதற்கு இக் கதைத்தொகுதி சான்று. புனைவின் சுவாரஸ்யம் மட்டும் இலக்காக அன்றி மானுட வாழ்வைப் பேசும் பிரதிகளாகவும் தன் கதைகளை படைக்க முயன்றிருக்கிறார். கதைகளில் வரும் கதாபாத்திரங்களின் அகத்தோற்றத்தை, அவர்தம் உளச்சார்புகளை, சம்சயங்களை மொழியில் லாவகமாக வெளிப்படுத்துகிறார். பல கதைகள் குறியீடுகளாகவும் குறியீடுகளை தமக்குள் கொண்டனவாகவும் நிகழ்கின்றன. சில கதைகள் போகிற போக்கில் மாய யதார்த்தக் கூறுகளைத் தொட்டுச் செல்கின்றன.

உங்கள் கருத்துக்களை பகிர :
அஜயன் பாலா :

சிறுகதைகள் :

நாதன் பதிப்பகம் :