கூடங்குளம் திட்டத்தைப் புறக்கணிப்போம்

ஆசிரியர்: தமிழில் : யூமா வாசுகி

Category சமூகம்
Publication பூவுலகின் நண்பர்கள்
FormatPaper Back
Pages 32
First EditionJan 2013
Weight50 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹20.00       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் உள்பக்கம் பார்க்க Click Here


அரை நூற்றாண்டுக்கு முன்பு கேரள அறிவியல் இலக்கியப் பேரவையின் (கேரள சாஸ்திர சாகித்ய பரிஷத்) ஆரம்பக் கட்டத்தில், அறிவியல் உலகத்திலுள்ள மற்ற பலரையும்போல பேரவையும் அணு தொழில் நுட்பத்தின் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளில் நம்பிக்கை கொண்டிருந்தது. அளவற்றதும் செலவு குறைந்ததுமான சக்தி செல்வத்தை நோக்கி சன்னல்கள் திறக்கப்பட்டிருக்கின்றன என்று பேரவையும் கருதியது. ஆனால் பலவித அணு உலைகளிலும் வழிமுறை செய்யும் நிலையங்களிலும் அணுக் கழிவைச் சேர்த்து வைக்கும் நிலையங்களிலும் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் ஆபத்துகளும், அவற்றின் மீது அதிகாரிகள் எடுத்துக்கொண்டிருக்கும் ஆணவமான அணுகுமுறைகளும் சந்தேகத்தின்விதைகளைத் தூவின. 1979 ஆம் ஆண்டு ஏற்பட்ட த்ரீமைல் ஐலண்ட் ஆபத்து ஒரு முன்னறிவிப்பாயிருந்தது. அணு உலைகள் செயல்படத் தொடங்கி பத்தாண்டுகளுக்கு மேல் ஆகியும் அணுக் கழிவைக் கையாள்வது என்பது மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. இதுவும் இந்தத் தொழில் நுட்பத்தின் பொருத்தப்பாட்டைப் பற்றி சந்தேகத்தை எழுப்பியது. தாங்கக் கூடாத பாரத்தைத்தான் நாம் எதிர்காலத் தலைமுறையின் மீது சுமத்துகிறோம் என்ற உண்மை உணரப்பட்டது.

உங்கள் கருத்துக்களை பகிர :