குழந்தைகளை கொண்டாடுவோம்

ஆசிரியர்: ஜ. அமனஷ்வீலி

Category கட்டுரைகள்
Publication பாரதி புத்தகாலயம்
FormatPaper Back
Pages 160
ISBN978-81-89909-11-6
Weight200 grams
₹120.00 ₹114.00    You Save ₹6
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



ஆரம்பப் பள்ளியின் தயாரிப்பு வகுப்பில் உள்ள ஆறு வயதுக் குழந்தைகளுடன் ஆசிரியர் எப்படிக் கலந்து பழக வேண்டும் என்பது பற்றிய நூலை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். இந்த "அசாதாரண” மாணவர்களுடன் கடந்த 15 ஆண்டுகளாகக் கலந்து பழகிய அனுபவம் இந்நூலில் பொதுமைப்படுத்தப் பட்டுள்ளது. ஆரம்பத்தில் பெற்றோர்கள் சந்தேகப் பட்டனர் (“இந்த வயதில் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டுமா?” என்றனர் அவர்கள்), ஒரு சில விஞ்ஞானிகள் மறுப்பு தெரிவித்தனர் (“எதற்கு அவசரம்? குழந்தைகளின் மனநிலை இதற்குத் தயாராயில்லை!” என்றனர் இவர்கள்)... ஆண்டுகள் உருண்டோடின. தயாரிப்பு வகுப்பு பற்றிய பிரச்சினை அரசின் முக்கியத்துவத்தைப் பெற்றது.
பள்ளியில், நர்சரிப் பள்ளியில் அல்லது வீட்டுச் சூழ்நிலையில் ஆறு வயதுக் குழந்தைகளுக்குப் படிப்புச் சொல்லித் தர முடியுமா, இது அவசியமா என்று இந்நூலில் நான் நிரூபிக்கப் போவதில்லை. மாறாக, ஆறு வயதுக் குழந்தைகளுக்கு என் கருத்துப் படி எப்படிப்பட்ட பள்ளி வாழ்க்கையை அளிக்கலாம் என்பது பற்றி இந்நூலில் கூற விழைகிறேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கட்டுரைகள் :

பாரதி புத்தகாலயம் :