குற்ற விசாரணை

ஆசிரியர்: நாகரத்தினம் கிருஷ்ணா

Category நாவல்கள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaper Pack
Pages 256
ISBN978-93-82033-10-3
Weight400 grams
₹230.00 ₹195.50    You Save ₹34
(15% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



மன ஊனமுற்ற சராசரி மேற்கத்திய இளைஞனொருவனுடைய அகவெளிக் கதவு முதன்முறையாக விரியத் திறக்கப்படுகிறது. முதல் மனிதனென்று கற்பிதம் செய்யப்பட்ட 'ஆதாம' பெயரை, கதைநாயகனுக்கு லெ கிளேஸியொ தேர்வுசெய்திருப்பது தற்செயல் நிகழ்வல்ல. கதைநாயகன் நம்முள் உறங்கிக்கொண்டிருக்கும் ஆசாமி. அவன் லெ கிளேசியோவிடம் கண்விழிக்கையில் நாவல் பிறந்திருக்க வேண்டும். நம்மிடம் முடிவற்ற பதில்களும் ஆதாம் போன்ற சித்தர்களிடம் முடிவுறாக் கேள்விகளும் இருக்கின்றன. கிளேஸியொ அதனை 'குற்ற விசாரணையை இலக்கிய மொழியில் பதிவுசெய்திருக்கிறார். 1963இல் கிளேசியொவின் முதல் நாவல் "குற்ற விசாரணை' வெளிவந்த போது, பிரெஞ்சு இலக்கிய உலகம் அவரது மொழி கண்டு விக்கித்தது.ரெனெடோ இலக்கிய விருதை நாவலுக்கு அளித்து 23 வயது இளைஞரை உற்சாகப்படுத்தினார்கள். 2008இல் பெற்ற நோபெல் பரிசுக்குப் பிறகுங்கூட அவர் பெயரோடு சேர்த்து உச்சரிக்கப்படும் நாவல் 'குற்ற விசாரணை'.


உங்கள் கருத்துக்களை பகிர :
நாகரத்தினம் கிருஷ்ணா :

நாவல்கள் :

காலச்சுவடு பதிப்பகம் :