குயிலின் மௌனத் தவம்

ஆசிரியர்: ஸ்ருதி வினோ

Category நாவல்கள்
FormatPaperBack
Pages 296
Weight350 grams
₹200.00 $8.75    You Save ₹10
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866வானம் தங்கநதியாய் பொங்கி வழியும் காலைப்பொழுது திரைப்படத்திற்குப் போவதை திருவிழாவைப் போல கொண்டாடும் நடுத்தரவர்க்கத்து பெண்களைப் போல் மேகங்கள் கண்கூசும் ஜொலிப்புடன் ஆங்காங்கே மிதந்து கொண்டிருந்தன.
தமிழ்நாட்டில் சூரியனின் பார்வையில் எப்போதும் செல்லப்பிள்ளையாக வலம் வரும் வேலூர் மாவட்டம் ஒரு காலத்தில் பொன்னையாறும் பாலாறும் கரைபுரண்டு ஓடிய மாவட்டத்தில், இன்று இந்த இரு ஆறுகளும் மக்களின் தாகத்தைத் தணிக்க முடியாத சோகத்தில் வறண்டு போன நிலையில் பரிதாபமாகக் காட்சியளித்தது.
பல புராதன அடையாளங்களைக் கொண்ட வேலூர் மாவட்டத்தை தற்போது நினைத்த மாத்திரத்தில் ஞாபகத்திற்கு வருவது வேலூர் மத்திய சிறைச்சாலைதான். அகலமான சாலையின் இருபுறங்களிலும் மரங்கள் வரிசையாய் அலங்கரிக்க, கிட்டத்தட்ட பத்து கிலோ மீட்டர் தூரத்திற்குப் பதினான்கடி உயர காம்பவுண்ட் சுவற்றின் மேல் பகுதியில் மின்வேலி சுற்றப்பட்டு கம்பீரமாகக் காட்சி தந்தது. பல நூற்றாண்டுகளாக வினோபா, காமராசர், அண்ணா போன்ற லட்சியவாதிகளையும், ஆட்டோசங்கர், பிரேமானந்தா இன்னும் சில அரசியல் துரோகிகள் எனப் பல கொடுங்கோலன்களையும் தனக்குள் வைத்திருந்த வைத்திருக்கும் மத்திய சிறைச்சாலை.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஸ்ருதி வினோ :

நாவல்கள் :

விசா பப்ளிகேசன்ஸ் :