குமாஸ்தாவின் பெண்

ஆசிரியர்: அறிஞர் அண்ணா

Category சிறுகதைகள்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 80
Weight100 grams
₹30.00 ₹28.50    You Save ₹1
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



கண்கள் மூடிக் கொண்டன. கை தளர்ந்து கீழே தொங்கிற்று, கழுத்து சாய்ந்தது, சோமு பிணமாகக் கீழே விழுந்தான். பிணத்தை ஹாலிலேயே கிடத்திவிட்டு, நேரே என் அறைக்குச் சென்று, அவ்வப்போது துண்டு துண்டாக எழுதி வைத்திருந்த இந்த என் வரலாற்றை எழுதி முடித்தேன். ஒரு கொலை செய்துவிட்டு, இவ்வளவு "பாரதத்தை' எப்படி எழுதினேன் என்று ஆச்சரியப்படுவீர்கள். தங்கை சாந்தாவுக்கு விஷயம் தெரியட்டும் என்றுதான் எழுதினேன். தூக்கு மேடை ஏறப்போகும் நான், என் துயர்மிக்க கதையை என் தங்கைக்கேனும் கூறாவிட்டால் மனம் துடிக்கும். ஆகவே, நிம்மதியுடன் சாவதற்காகவே இதை எழுதினேன்.
கன்னியாக இருக்கையில் காதல் கொண்டு, அது கனியாததால், வெம்பிய வாழ்வு பெற்று, விதவையாகி, விதவைக் கொடுமையிலிருந்து விடுதலை பெற விபசாரியாகி, விபசார வாழ்க்கையிலே ஆனந்தம் பெற ஆசை நாயகனைப் பெற்று, அவனது துரோகத்தால் துயருற்று, அவனைக் கொன்ற காந்தாவின் கதை இதுவே. போலீசாரிடம் தானே நேரில் சென்று கூறி, கொலையை ஒப்புக் கொண்டு, தடுமாற்றமின்றிக் கோர்ட்டில் நின்று தண்டனை பெற்று, தூக்கு மேடை ஏறி, தன் வாழ்வைத் துண்டித்துக் கொண்டாள் காந்தா. போலீசுக்குப் போகும் முன்னம், கருப்புச் சீலையைப் போர்த்திக் கொண்டு, சாந்தாவைக் கண்டு செய்தி ஏதும் பேசாது, “இதோ, இதுதான் உன் காந்தா!” என்று கூறி விட்டு - வரலாற்றுக் கட்டை அவளிடம் தந்து போனாள். அந்தக் காட்சியை இன்னும் சாந்தா மறக்கவில்லை! எப்படித்தான் மறப்பாள்?

உங்கள் கருத்துக்களை பகிர :
அறிஞர் அண்ணா :

சிறுகதைகள் :

கௌரா பதிப்பக குழுமம் :