குன்றிமணி

ஆசிரியர்: பாலகுமாரன்

Category நாவல்கள்
FormatPaperback
Pages 240
Weight200 grams
₹120.00 ₹114.00    You Save ₹6
(5% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



மதிப்பிற்குரிய ஸ்ரீபாலகுமாரன் அவர்களுக்குநமஸ்காரங்களுடன் எழுதிக்கொண்டது. கடந்த பதினெட்டு வருடங்களாக தங்களின் நாவல்கள் எனக்குப் பரிச்சயம். உள்ளம் கவர் கள்வனில் ஆரம்பித்து இன்றைய காசும் பிறப்பும் வரை, நான் தங்களின் எல்லா நாவல்களையும் வாசித்துள்ளேன். இதுவரை நான் தங்களுக்கு எந்தக் கடிதமும் எழுதியதில்லை . ஆனால், காசும் பிறப்பும் படித்ததிலிருந்து, தங்களுக்குக் கடிதம் எழுத வேண்டும் என்ற எண்ணம் என்னுள் தோன்றியது. இக்கடிதம் ஒரு வாசகனின் கடிதம் மட்டும் அல்லாமல், அதையும் மீறிய ஒன்றாக நான் கருதுகிறேன். ஏனெனில், கடந்த ஐந்தரை வருடங்களாக நடந்த நிகழ்வுகள் மற்றும் இன்றும் நடந்து கொண்டிருக்கின்ற நிகழ்வுகள்.
1999-ஆம் வருடம் நானும் எனது குடும்பமும் ஹைதராபாத்திலிருந்து சென்னைக்குக் குடி பெயர்ந்தோம். 1986-ஆம் வருடம், நாவல் படிக்க ஆரம்பித்த முதல், 1999-ஆம் வருடம் சென்னை வரும் வரை, நான் தங்களைத் தொடர்பு கொள்ளவோ அல்லது கடிதம் எழுதவோ முயன்றதில்லை.

உங்கள் கருத்துக்களை பகிர :
பாலகுமாரன் :

நாவல்கள் :

விசா பப்ளிகேசன்ஸ் :