குட் நைட்!
ஆசிரியர்:
டாக்டர் டி நாராயண ரெட்டி
விலை ரூ.115
https://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%21?id=1442-1274-5819-5260
{1442-1274-5819-5260 [{புத்தகம் பற்றி முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கல்வி கற்பது பற்றிக் குறிப்பிடும்போது இப்படிச் சொல்லி இருந்தார்: ஒரு விளக்கால் இன்னொரு விளக்கை ஏற்றுவோம் .
எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் தெரிந்துகொள்ளாமல் இருப்பதைவிட ஆபத்தானது அந்த விஷயத்தைப் பற்றி அரைகுறையாகத் தெரிந்து வைத்திருப்பது. மேலும் நாம் பல விஷயங்களில் ஆயத்தமாக முன் முடிவுகளைக் கொண்டிருப்பவர்களாக இருக்கிறோம். இதுவும் மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும்.
ஒருவருக்குத் தெரிந்த செய்திகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதுகூட இன்னொரு விளக்கை ஏற்றும் செயலே. அதுவும் அறிவியல் தனது பன்முகத் தன்மையால் உலகையே தன் கீழ்க் கொண்டுவந்துவிட்ட காலம் இது. அறிவியல், ஒவ்வொரு நாளும் புதிய புதிய உண்மைகளைப் பந்தி வைத்துக்கொண்டு இருக்கிறது. அதில் செக்ஸ் விஷயமும் விதிவிலக்கல்ல!
டாக்டர் நாராயண ரெட்டி அவர்கள் இந்தியாவில் செக்ஸுவல் மெடிசன் துறையில் புகழின் உச்சியில் இருப்பவர். அவர் தனது ஆய்வுப் பார்வையுடன் செக்ஸ் அறிவியல் உண்மைகளை இந்தப் புத்தகத்தில் தமிழ் வாசகர்களுக்கு வழங்கியிருக்கிறார்.
இந்தப் புத்தகம் எளிய தமிழில் இனிய முறையில் செக்ஸுவல் மருத்துவ அடிப்படையில், நம்முடைய பல சந்தேகங்களுக்கும் பல முன் முடிவுகளுக்கும் மூடநம்பிக்கைகளுக்கும் வேட்டுவைத்து தெளிவான பதிலை அறிவியல்பூர்வமாக வழங்குகிறது.
டாக்டர் விகடனில் வெளிவந்து வாசகர்களின் பேராதரவைப் பெற்ற தொடர் இப்போது நூல் வடிவில் உங்கள் கைகளில் தவழ்கிறது.
படிப்போம்... தெளிவோம்!}]}

www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866